உழைப்பாளியில் குரூப் டான்ஸராக லாரன்ஸ்.. ரஜினியுடன் சிறுவயதில் எடுத்தபோட்டோவை ஷேர் செய்து குதூகலம்!

சென்னை: நடிகர் லாரன்ஸ் உழைப்பாளி படத்தில் குரூப் டான்ஸராக ரஜினிகாந்துடன் எடுத்த போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

பிரபல நடிகரான ராகவா லாரன்ஸ், படிப்படியாக சினிமாவில் உயர்ந்தவர். குரூப் டான்ஸராக இருந்த லாரன்ஸ், நடன இயக்குநராகி பின்னர் நடிகரானார்.

நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான இவர், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராகவும் வலம் வருகிறார். காஞ்சனா சீரிஸ் படங்கள் மூலம் மக்களிடையே பெரும் பிரபலமானவர்.

பட்டைய கிளப்பி..

பட்டைய கிளப்பி..

உதவிக்கரம் நீட்டுவதில் டாப் நடிகர்களையே தூக்கி சாப்பிடுகிறார். நடிகர் லாரன்ஸிடம் உதவி கேட்டால் நிச்சயம் கிடைக்கும் என அண்டை மாநில மக்களுக்கு கூட தெரிகிறது. கொரோனா லாக்டவுன் நேரத்தில் ஏழை எளிய மக்களுக்கு உதவுவது, சினிமா தொழிலாளர்களுக்கு உதவுவது என பட்டைய கிளப்பி வருகிறார்.

பலருக்கும் உதவி

பலருக்கும் உதவி

பிரதமர், முதல்வர் என நிவாரண நிதி வழங்குவது மற்றும் ஃபெப்சி அமைப்புக்கு நிதி வழங்குவது, தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர் சங்கம் என நிதியுதவி வழங்கி வருகிறார். அதுமட்டுமின்றி படிப்பு செலவுக்கு பணமில்லாமல் தவிப்பவர்கள் மருத்துவ செலவுக்கு கஷ்டப்படுபவர்கள் என பலருக்கும் உதவி செய்து வருகிறார்.

ரஜினியுடன் குரூப் டான்ஸர்

ரஜினியுடன் குரூப் டான்ஸர்

இந்நிலையில் நடிகர் லாரன்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் ரஜினிக்காந்துடன் எடுத்த பழைய போட்டோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். உழைப்பாளி படத்தில் குரூப் டான்ஸராக இருந்தபோது நடிகர் ரஜினியுடன் எடுத்த போட்டோவை அவர் ஷேர் செய்துள்ளார்.

இனிமையான நினைவுகள்

இனிமையான நினைவுகள்

அந்த போட்டோவுக்கு உழைப்பாளி படத்தின் போது நான் குரூப் டான்ஸராக இருந்த போது என் குருவுடன் இருந்த இனிமையான நினைவுகள்.. கடின உழைப்பு ஒருபோதும் தோற்காது.. என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

வைரலாகும் போட்டோ

வைரலாகும் போட்டோ

இந்த போட்டோவில் நடிகர் லாரன்ஸ் சிறு வயது பையனாக அடையாளம் தெரியாமல் உள்ளார். இந்த போட்டோவை பார்த்த பலரும் நடிகர் லாரன்ஸை பாராட்டி வருகின்றனர். ரஜினியும் லாரன்ஸும் இணைந்து இருக்கும் இந்த போட்டோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X