கார்த்திக்கு வில்லனாகும் நடிகர் லாரன்ஸ்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
சென்னை : நடிகர் கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த படம் கைதி.
இந்தப் படம் லோகேஷ் யூனிவர்சில் இடம்பெற்றுள்ள நிலையில், படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் உருவாகவுள்ளது.
தற்போது தளபதி 67 படத்தில் கவனம் செலுத்திவரும் லோகேஷ், விரைவில் அந்தப்படத்தை இயக்கவுள்ளார்.

கார்த்தியின் கைதி படம்
நடிகர் கார்த்தி, நரேன், ஜார்ஜ் மரியான் மற்றும் ஹரீஷ் உத்தமன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டில் வெளியான படம் கைதி. எந்தவிதமான கெட்டப்பும் இல்லாமல் நடிப்பை மட்டுமே நம்பி இந்தப் படத்தில் கார்த்தி பயணம் செய்திருந்தார். மாநகரம் படத்தை தொடர்ந்து இந்தப் படத்தை சிறப்பாக ரசிகர்களை கவரும் வகையில் கொடுத்திருந்தார் லோகேஷ் கனகராஜ்.

அழுக்கு லுங்கியுடன் நடித்த கார்த்தி
படத்தில் சிறையில் இருந்து தண்டனைக்காலம் நிறைவடைந்து வெளியில் வரும் கைதி கார்த்தி, வரும் வழியில் ஆபத்தில் சிக்கும் காவல்துறையினரை மீட்கும் வகையில் இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்திருந்தது. அழுக்கு லுங்கியுடன் ஒரே உடையுடன் இந்தப் படத்தில் நடித்திருந்தார் கார்த்தி. சாக்லேட் பாய் கேரக்டர்களில் நடித்துள்ள கார்த்திக்கு இது மிகவும் சேலஞ்சிங்கான ரோலாக அமைந்திருந்தது.

கைதி 2 படத்தில் கார்த்தி
அதை மிகவும் சிறப்பாக செய்திருந்தார் கார்த்தி. அவர் தன்னுடைய மகளை தேடிச் செல்லும் உணர்ச்சிப்பூர்வமான காட்சி அமைப்புகளை மிகவும் சிறப்பாக அமைத்திருந்தார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக கைதி 2 படம் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தளபதி 67 படத்தை இயக்கவுள்ள லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கைதி 2 படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கைதி 2 படத்தில் ரோலக்ஸ் சூர்யா
விக்ரம் படத்தில் வெறுமனே குரலாக கார்த்தி தன்னை வெளிப்படுத்தியிருந்தார். அவர் தன்னுடைய மகளுடன் வாழ்ந்து வருவதாக அந்தப் படத்தில் காட்டப்பட்டது. கைதி படத்தில் பெரிய அளவிலான போதைப் பொருளை கைப்பற்ற காரணமாக கார்த்தி அமைந்திருந்த நிலையில், விக்ரம் படத்தில் அவரை ரோலக்ஸ் தேடுவதாக காட்சி அமைந்திருந்தது. இந்நிலையில் கைதி 2 படத்தில் சூர்யாவும் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கார்த்திக்கு வில்லனாகும் லாரன்ஸ்
இதனிடையே படத்தில் கார்த்திக்கு வில்லனாக லாரன்ஸ் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கதைப்படி விஜய் சேதுபதிக்கு பதிலாக லாரன்சை, ரோலக்ஸ் நியமிப்பதாக கதை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்துவரும் லாரன்ஸ் இந்தப் படத்தில் கொடூரமான வில்லனாக நடிக்கவுள்ளது மற்றும் லோகேஷ் யூனிவர்சில் இடம்பெறவுள்ளது அவரது ரசிகர்களை வெகுவாக உற்சாகப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











