செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு.. ரசிகர்கள் அன்பால் லெஜண்ட் சரவணன் நெகிழ்ச்சி!

சென்னை: கோலிவுட்டில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த நடிகராக மாறியுள்ளார் லெஜண்ட் சரவணன். பிரபல துணிக்கடை உரிமையாளரான இவரது நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டில் தி லெஜண்ட் படம் வெளியானது. இந்தப்படம் ரசிகர்களை சிறப்பாக கவர்ந்து 20 கோடிக்கும் மேல் வசூலை குவித்திருந்தது.

இந்நிலையில் தன்னுடைய இரண்டாவது படத்தை அறிவித்து அதன் ஷூட்டிங்கிலும் இணைந்துள்ளார் லெஜண்ட் சரவணன். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படமும் தன்னுடைய முதல் படத்தை போலவே மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

legend saravanan durai senthil kumar tuticorin

நடிகர் லெஜண்ட் சரவணன்: ஏராளமான ரசிகர்களை கவரும் வகையில் மாறியுள்ளார் பிரபல தொழிலதிபரான லெஜண்ட் சரவணன். கடந்த 2022ம் ஆண்டில் இவரது லெஜண்ட் படம் ரிலீசாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் 20 கோடி ரூபாய்களை தாண்டி வசூலித்திருந்தது. இந்நிலையில் தற்போது அடுத்ததாக தன்னுடைய இரண்டாவது படத்தை அறிவித்து அதன் ஷூட்டிங்கை துவங்கியுள்ளார் சரவணன். இந்தப் படத்தை எதிர்நீச்சல் உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்துள்ள துரை செந்தில்குமார் இயக்கிவருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது.

தூத்துக்குடியில் சூட்டிங்: அடுத்த கட்ட சூட்டிங்கிற்காக தற்போது லெஜண்ட் சரவணன் உள்ளிட்ட படக்குழுவினர் தூத்துக்குடி சென்றுள்ளனர். அங்கு சில ஆக்சன் காட்சிகளை படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாக உள்ள இந்த படம் தன்னுடைய முதல் படத்தை போலவே மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்று லெஜண்ட் சரவணன் தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் தூத்துக்குடி செல்வதற்கு முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் நடிகர் விஜய்யின் அரசியல் குறித்தும் பேசியுள்ளார். மேலும் சரியான நேரம் வாய்த்தால் தானும் அரசியலில் என்ட்ரி கொடுப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

உற்சாக வரவேற்பு: இந்நிலையில் தூத்துக்குடி சென்ற லெஜண்ட் சரவணனுக்கு ஏராளமான ரசிகர்கள் தங்களது உற்சாகமான வரவேற்பை விமானநிலையத்திலேயே கொடுத்தனர். செண்டை மேளம் முழங்க தங்களுடைய ஹீரோவிற்கு அவர்கள் வரவேற்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். அவர்களுடன் இணைந்து புகைப்படங்களை எடுத்துக் கொண்ட லெஜெண்ட் சரவணன் அவர்களுக்கு கையசைத்து தன்னுடைய உற்சாகத்தை வெளிப்படுத்தி பின்பு அங்கிருந்து சென்றதை பார்க்க முடிந்தது. இதன் வீடியோ தற்போது வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது.

பாயல் ராஜ்புட் ஜோடி?: தன்னுடைய முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ள லெஜண்ட் சரவணன், தற்போது இரண்டாவது படத்திலும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஜிப்ரான் இசையில் களமிறங்கியுள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல தெலுங்குப்பட நடிகை பாயல் ராஜ்புட் இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தில் நடிகை ஆண்ட்ரியா, நடிகர் ஷாம் உள்ளிட்டவர்களும் இந்தப் படத்தில் லீட் கேரக்டர்களில் நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக வெளிநாடு செல்லவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். முன்னதாக சூரி நடிப்பில் கருடன் என்ற மிகப்பெரிய படத்தை கொடுத்திருந்த துரை செந்தில்குமார், லெஜண்ட் சரவணனை எப்படி ரசிகர்களிடையே வெளிப்படுததுவார் என்பதை தெரிந்துக் கொள்ள அனைவரும் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X