Legend Saravanan :அடுத்தடுத்த கலக்கல் புகைப்படங்களை வெளியிட்ட சரவணன்.. ரசிகர்கள் ஹாப்பி அண்ணாச்சி!
சென்னை : சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரும் நடிகருமான சரவணன் அருளின் புதிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
தி லெஜண்ட் படத்தின்மூலம் நாயகனாக அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்துள்ளார் சரவணன் அருள்.
இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும், வசூல்சாதனை புரிந்துள்ளது. ஓடிடியிலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

கலக்கல் புகைப்படங்களை வெளியிட்ட லெஜண்ட் சரவணன் :
சரவணா ஸ்டோர்ஸ் கடையின் உரிமையாளரான சரவணன் அருள், அந்தக் கடையின் விளம்பரங்களில் ஆரம்பத்தில் நடித்தார். இந்த விளம்பரங்கள் நெகட்டிவ் விளம்பரத்தை கொடுத்தது. ஆயினும் முன்னணி நடிகைகளுடன் அவர் இந்த விளம்பரங்களில் நடித்திருந்தார். இதையடுத்து தி லெஜண்ட் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த ஜூலை 28ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்தது.
கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் படம் வசூல் சாதனை புரிந்தது. படம் ஓடிடியிலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய அடுத்தப் படத்திற்கான கதையை தேர்ந்தெடுக்கும் பணியில் தற்போது சரவணன் அருள் ஈடுபட்டுள்ளார். இதனிடையே, தன்னுடைய அறிமுகப் படத்தில் இருந்த தன்னுடைய கெட்டப்பை மாற்றி தற்போது அடுத்தடுத்த போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் சரவணன் அருள்.

கடந்த மாதத்தில், திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த சரவணன், மணமக்களை வாழ்த்திவிட்டு, தன்னுடைய புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார். கோட் சூட்டில் அவரது அந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இந்த கெட்டப் ரசிகர்களை கவர்ந்த நிலையில், அவரது அடுத்தப் படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. சிறப்பான இயக்குநர்கள், இசையமைப்பாளர் என பிரம்மாண்டமாக முதல் படத்தை தயாரித்திருந்த நிலையில், அடுத்தப்படமும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.
இதனிடையே, இன்றைய தினமும் அடுத்த கெட்டப்பில் தன்னுடைய புதிய புகைப்படங்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சரவணன் அருள் வெளியிட்டுள்ளார். ஆரஞ்ச் மற்றும் கருப்பு நிற காம்பினேஷனில் கோட் சூட்டில் இந்தப் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். லேசான தாடியுடன் தற்போது அவர் மாறியுள்ள நிலையில், இந்த கெட்டப் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அவர் மாஸாக இருப்பதாக கமெண்ட்ஸ் எழுந்துள்ளது.

மேலும் அவரது அடுத்தப் படத்தின் அறிவிப்பிற்காக காத்திருப்பதாகவும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துள்ளனர். அவரது கெட்டப்பிலும் சிறிய கரெக்ஷன்சையும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துள்ளனர். அவரது ஹேர்ஸ்டைலை மாற்றும்படியும் ரசிகர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். அவரது ரசிகர்கள் வட்டம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக இந்த கெட்டப்பில் தான் வந்துள்ளதாக அவர் தன்னுடைய கேப்ஷனில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











