Legend Saravanan: முன்னதாகவே துவங்கிய லெஜண்ட் சரவணன் பட சூட்டிங்.. என்ன காரணம் தெரியுமா?
சென்னை: நடிகர் லெஜெண்ட் சரவணன் நடிப்பில் முன்னதாக வெளியான தி லெஜண்ட் படம் ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களைக் கவர்ந்து சிறப்பான வசூலையும் பெற்றது. தயாரிப்பாளராகவும் நடிகராகவும் இந்த படம் லெஜண்ட் சரவணனுக்கு சிறப்பாக கை கொடுத்தது.
இந்நிலையில் அடுத்ததாக துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனது இரண்டாவது படத்தின் சூட்டிங்கில் இன்றைய தினம் லெஜண்ட் சரவணன் இணைந்துள்ளார். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளன. இந்த புகைப்படங்களில் லெஜண்ட் சரவணன் மிகச் சிறப்பான லுக்கில் காணப்படுவதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

லெஜண்ட் சரவணன்: பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் நடிப்பில் முன்னதாக வெளியான தி லெஜண்ட் படம் மிகப் பெரிய அளவில் மாஸ் காட்டியது. இந்தப் படத்தை அஜித்தின் உல்லாசம் படத்தை இயக்கிய ஜேடி ஜெர்ரி இயக்கியிருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இந்தப் படத்தின் அனைத்து பாடல்களும் சிறப்பாக ரசிகர்களை கவர்ந்த நிலையில் இந்த படத்தை லெஜண்ட் சரவணனே தயாரித்திருந்தார். படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்த நிலையில் அவரது லுக் மட்டும் விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் தற்போது தன்னுடைய 2வது படத்தின் சூட்டிங்கை துவங்கியுள்ளார் லெஜண்ட் சரவணன்.
இயக்குநர் துரை செந்தில்குமார்: பிரபல இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் இணைந்துள்ள அவரது 2வது படத்தின் ஷூட்டிங் இன்றைய தினமே துவங்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த படத்தின் சூட்டிங் அடுத்த மாதத்தில் தான் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் நடிகர்களின் சம்பளம் உள்ளிட்ட விஷயங்களை முன்னிட்டு தயாரிப்பாளர் சங்கத்தினர் இன்னும் சில தினங்களில் முக்கிய அறிவிப்பை மேற்கொள்ளவுள்ளதாகவும் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் வரையில் புதிய படங்களின் சூட்டிங் துவங்கக்கூடாது என்று அறிவிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படும் நிலையில் அத்தகைய அறிவிப்புக்கு முன்னதாகவே லெஜண்ட் சரவணனின் 2வது படத்தின் சூட்டிங்கை இன்றைய தினமே பட குழுவினர் துவங்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
துவங்கியது சூட்டிங்: இதன் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் நடித்து வெளியான கருடன் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. இந்நிலையில் துரை செந்தில்குமார் தனது சம்பளத்தை இரட்டிப்பாக்கி விட்டதாக கூறப்படுகிறது. முதல் படத்தில் கமர்சியலாக நடித்திருந்த லெஜண்ட் சரவணனை இந்தப் படத்தில் எத்தகைய கேரக்டரில் துரை செந்தில்குமார் வெளிப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பும் தற்போது எழுந்துள்ளது.
கெட்டப்பை மாற்றிய லெஜண்ட் சரவணன்: முதல் படத்தில் க்ளீன் ஷேவுடன் காணப்பட்ட லெஜண்ட் சரவணன், தற்போது தன்னுடைய லுக்கை சரியாக மாற்றிக் கொண்டுள்ளார். தாடி மீசையுடன் அவரது லுக் கம்ப்ளீட்டாக மாறியுள்ள நிலையில் அவரது இந்த கெட்டப் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த படமும் ரசிகர்களுக்கு சூப்பர் விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











