பிக் பாஸ் சீசன் 8.. கமலுக்கு பதில் விஜய் சேதுபதியா? அந்த பயம் மட்டும் இருக்கு.. நடிகர் பேட்டி!
சென்னை: தமிழ் திரைப்பட நடிகரான லிங்கா 2015ம் ஆண்டு வெளியான சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறார் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து சிந்துபாத்,பரோல், சேதுபதி ஐபிஎஸ், உடன்பால் உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதியுடன் கணிசமான படத்தில் நடித்துள்ள லிங்கா அவர் குறித்து பல விஷயத்தை பகிர்ந்துள்ளார்.
விஜய் சேதுபதி அண்ணாக்கூட சேதுபதி படத்தில் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. அந்த படத்தில் ஒரு மார்க்கெட்டில் சண்டை நடக்கும் போது ஒரு பாண்டை தூக்கு போட வேண்டும், ஆனால், இதற்காக அட்டையில் ஒரு பாண்ட் செய்யப்பட்டது. ஆனால், அந்த காட்சி சரியாக வராததால், நிஜ பாண்டை தூக்கி வீசவா என்று கேட்டார், நானும் சரி சென்று சொல்லிவிட்டேன். ஆனால், அந்த காட்சியை ஒரே ஷாட்டில் நடித்து முடித்தார்.அதைப்பார்த்து நான் வியந்துவிட்டேன். அவர் என் அண்ணன், குரு, ஆசாம் என்று சொல்லாம் என்றார்.

நடிகர் விஜய்சேதுபதி: பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவது பற்றி கேள்விக்கு பதில் அளித்த லிங்கா, சேது அண்ணாவை யாரும் வசைபாடிவிடக் கூடாது என்கிற எண்ணம் இருக்கிறது.ஆனால், சேது அண்ணனின் குணத்திற்கு ரொம்ப, சாதாரணமான இயல்பாக கையாளக்கூடியவர். இந்த நிகழ்ச்சியில் பேசுவதாக இருந்தாலும், அதை சுவாரசியமாக ஆக்குவதாக இருந்தாலும் அதை அவர் சரியாக செய்துவிடுவார். ஏன் என்றால், எந்த வேலையாக இருந்தாலும் அதற்காக மெனக்கெட்டு வேலைபார்ப்பார் என்பதால், நிச்சயம் பிக் பாஸ் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்குவார் அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
யாரும் விமர்சிக்கக்கூடாது: ஆனால், அவரின் தனிப்பட்ட குணம் எனக்கு தெரியும் என்பதால், சொல்லுகிறேன். அவர் யாரிடமும் கடுமையாக நடந்து கொள்ள மாட்டார். அந்த ஒரு பயம் மட்டும் எனக்கு இருக்கிறது. ஏன் என்றால், பல போட்டியாளர்கள் இருப்பார்கள் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு குணம் இருக்கும் அவர்களை இவர் எப்படி கையாளுவார் என்று தெரியவில்லை. அதே போல கடந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில், சிலர் கமல் இன்னும் கடுமையாக நடந்து இருக்க வேண்டும் என்கிற விமர்சித்தனர். இதனால், சேது அண்ணா கடுமையாக நடந்து கொள்ள மாட்டாரே என்ற பயம் மட்டும் எனக்கு இருக்கிறது.
மக்களுக்காக: பாலிவுட், கோலிவுட் என சேது அண்ணா பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்த நேரத்தில் வாரத்தில் இரண்டு நாள் தேதி ஒதுக்கி இதில் கலந்து கொள்வார் என்று தெரியாவில்லை. காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூக்கும் வரைக்கும் எப்போதும் பிஸியாகவே இருப்பார். இருந்தும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்றார். வேறு விதமான சேதுபதியை மக்களுக்கு காட்டுவதற்காகக்கூட இருக்கலாம் என்று அந்த பேட்டியில் நடிகர் லிங்கா பேசி உள்ளார்


Click it and Unblock the Notifications











