மறுமணம் செய்து கொள்வதை உடலுறவோடு மட்டும் பொருத்திப் பார்க்காதீங்க - லிவிங்ஸ்டன் மாஸ்டர் கிளாஸ்

சென்னை: நமது சமூகத்தில் விவாகரத்து என்பதையோ, மறுமணம் செய்து கொள்வதையோ சரியாக புரிந்து கொள்ளாத மக்கள் இருக்கத்தான் செய்கின்றனர். குறிப்பாக விவாகரத்து செய்கின்றார்கள் என்றால், அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை எனப் புரிந்து கொள்ளாமல், இவருக்கு மற்றொருவருடன் நெருங்கிய தொடர்பு உள்ளது, அதனால் விவாகரத்து வாங்கிவிட்டார் என மிகச் சுலபமாகக் கூறிவிடுகின்றார்கள். அதேபோல் மறுமணம் செய்து கொள்கின்றார்கள் என்றால், மறுபடியும் கல்யாணம் பண்றாங்கனா வேற எதுக்கா இருக்கும் எல்லாம் உடலுறவுக்குத்தான் எனவும் பேசுவோர் இன்றைக்கும் பெரும்பாலானோர் உள்ளனர். இவர்களுக்கு எல்லாம் விவாகரத்து குறித்தும் மறுமணம் குறித்தும் நடிகர் லிவிங்ஸ்டன் மாஸ்டர் கிளாஸ் எடுத்துள்ளார். அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் லிவிங்ஸ்டன் பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, " ஒருவன் குடிப்பான், அடிப்பான் அவனோடு அந்த பெண் வாழவேண்டுமா? அவனை விட்டுவிட்டு வேறு ஒருவனுடன் வாழலாமே? ஒருமுறை அடிபட்டு இருக்காங்க, அடுத்தமுறை தனது பார்ட்னரை சரியா தேர்வு செய்யனும்னு கவனமா இருப்பாங்க. இந்த சமூகத்தைப் பற்றி கவலைப் படாதீர்கள். இந்த சமூகம் வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும். நீங்க ரொம்ப நல்லா வாழ்ந்தா, என்னமா வாழ்றான்னு சொல்லுவாங்க. எவன் வாழ்த்துவான் சொல்லுங்க.

livingston divorce

விவாகரத்து: உங்க சொந்த பந்தத்துல நீங்க நல்லா இருப்பது யாருக்காவது புடிக்கும்னு நெனச்சுட்டு இருக்கீங்களா? இப்போ ஒருவருக்கு விவாகரத்து நடைபெறுகின்றது அதனைத் தவறுனு சொல்லுவீங்களா? அதைத் தவறுனே சொல்ல முடியாது. அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் என்னென்ன பிரச்னைகளை எதிர்கொள்கின்றார் என்பது யாருக்குத் தெரியும்? நீங்கள் குடும்பம், மானம், சொந்தம், மரியாதை இப்படி வாழ்ந்தீங்கனா, அது வாழ்க்கையில ஒரு பகுதிதான்.

மறுமணம்: எனது சொந்தத்தில் ஒருவர் இறந்துவிட்டார். அவரது உடல் வைக்கப்பட்டுள்ள ஃப்ரீசர் பாக்ஸ் மீது அவரது குழந்தை அமர்ந்து விளையாடிக்கொண்டு உள்ளது. அந்தக் குழந்தைக்கு தனது அப்பா இறந்துவிட்டார் எனத் தெரியவில்லை. அவரது மனைவி அழுது கொண்டு இருக்கின்றார். என்னால் அதனைப் பார்க்க முடியவில்லை, தேம்பித் தேம்பி அழுதேன். ஆனால் ஆறு மாதங்களுக்குப் பின்னர் அந்தப் பெண்ணுக்கு வேறு ஒரு திருமணம் செய்து வைத்தார்கள். பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது. அதேபோல் எனது சொந்தத்தில் ஒருவருக்கு 75 வயது ஆகின்றது. அவர் 65 வயது பாட்டியை திருமணம் செய்து கொண்டார். எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது. வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்தேன். என்னைப் பார்த்து நீங்கள் கேட்கலாம், 75 வயது தாத்தா 65 வயது பாட்டியை திருமணம் செய்து கொண்டதற்கா விருந்து வைத்தீர்கள் என,

livingston divorce

உடலுறவு: ஆனால் அதைப் பார்த்து சந்தோசப்படவேண்டும். தனியாக இருப்பது என்பது ரொம்பவும் கஷ்டம். அதை ஏன் ஒரு உடலுறவுப் பார்வையிலேயே அணுகுகின்றீர்கள். அப்படி அணுகாமல் இருங்கள். மறுமணம் செய்து கொள்வது தவறே இல்லை" இவ்வாறு பேசினார். லிவிங்ஸ்டனின் இந்தப் பேச்சு பலரது கவனத்தை ஈர்த்தது மட்டும் இல்லாமல் பரவலாக பாராட்டுகளையும் பெற்று வருகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X