Livingston: சீரியல்ல நடிச்சாச்சு.. அடுத்தது சினிமாதான்.. கோலிவுட்டில் நாயகியாகும் லிவிங்ஸ்டன் மகள்!
சென்னை: நடிகர் லிவிங்ஸ்டன் நடிகர் மற்றும் திரைக்கதை ஆசிரியராக செயல்பட்டு வருபவர். கடந்த 30க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக சினிமாவில் முன்னணி ஹீரோவாகவும் கேரக்டர் ரோல்களிலும் நடித்துள்ளார். பல படங்களுக்கு திரைகதை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ள லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிதா சின்னத்திரை சீரியல் நடிகையாக அருவி, மௌனம் பேசியதே உள்ளிட்ட சீரியல்களில் நாயகியாக நடித்துள்ளார்.
சின்னத்திரையில் சன் டிவியின் பூவே உனக்காக தொடரில் லீட் கேரக்டரில் என்ட்ரி கொடுத்த ஜோவிதா, அருவி சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். அடுத்ததாக சினிமாவில் நடிப்பதற்கும் தன்னுடைய மகள் தயாராகியுள்ளதாக லிவிங்ஸ்டன் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் உற்சாகம் தெரிவித்துள்ளார். விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நடிகர் லிவிங்ஸ்டன்: நடிகர் லிவிங்ஸ்டன் தமிழில் ஹீரோவாகவும் தொடர்ந்து கேரக்டர் ரோல்களிலும் நடித்து வருகிறார். கடந்த 1988ம் ஆண்டில் வெளியான கேப்டன் விஜயகாந்தின் பூந்தோட்ட காவல்காரன் படம் மூலம் இவர் தமிழில் என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து திரைகதை ஆசிரியராகவும் பல படங்களில் செயல்பட்டுள்ளார். இவரது மகள் ஜோவிதா சீரியல்களில் நாயகியாக நடித்து வருகிறார். சன் டிவியின் வூவே உனக்காக சீரியலில் லீட் ரோலில் நடித்திருந்த ஜோவிதா அடுத்ததாக அருவி தொடரில் நாயகியாக நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது ஜீ தமிழின் மௌனம் பேசியதே சீரியலிலும் இவர் நாயகியாக நடித்து வருகிறார்.
லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா: இந்நிலையில் அடுத்ததாக சினிமாவிலும் ஹீரோயினாக என்ட்ரி கொடுக்கவுள்ளார் ஜோவிதா. தன்னுடைய அப்பா லிவிங்ஸ்டன் உருவாக்கியுள்ள கதைக்களத்தில் ஜோவிதா விரைவில் நாயகியாக நடிக்கவுள்ளார். இந்த படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தன்னுடைய மகள் சினிமாவில் என்ட்ரி கொடுக்க உள்ளது குறித்து பேசியுள்ள நடிகர் லிவிங்ஸ்டன் அவர் சினிமாவில் என்ட்ரி கொடுக்க தேறிவிட்டதாக உற்சாகம் தெரிவித்துள்ளார். திரைப்படங்களுக்கு முன்னோடியாக இருப்பது நாடகங்கள்தான் என்று தெரிவித்துள்ளார்.
ட்ரெயினிங் கொடுத்த லிவிங்ஸ்டன்: அதனால் தான் தன்னுடைய மகளை முதலில் நாடகங்களில் நடிக்க வைத்து ட்ரெயினிங் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார் தற்போது தன்னுடைய மகள் திரைப்படங்களில் நடிப்பதற்கு தேறியுள்ளதாகவும் அதனால் அவர் அடுத்ததாக சினிமாவில் என்ட்ரி கொடுக்க உள்ளதாகவும் லிவிங்ஸ்டன் தெரிவித்துள்ளார். இந்தப் படதிற்கான கதையைக் கடந்த மூன்று ஆண்டுகளாக தான் திரைகதையாக உருவாக்கியதாகவும் படம் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் அமையும் என்றும் லிவிங்ஸ்டன் மேலும் உற்சாகம் தெரிவித்துள்ளார்.
ஜோவிதா உற்சாகம்: அருவி, மௌனம் பேசியதே உள்ளிட்ட சீரியல்களின் மூலம் ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நாயகியாக மாறியுள்ளார் ஜோவிதா. இந்த சீரியல்களில் அவரது கேரக்டர் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து முன்னணி நாயகியாக மாற்றியுள்ளது. இந்நிலையில் தான் சினிமாவில் என்ட்ரி கொடுக்கவுள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஜோவிதா, தன்னுடைய தந்தையை போலவே தானும் சினிமாவில் நல்ல இடத்தை பிடிப்பேன் என்றும் சீரியல்களை போலவே தனக்கு ரசிகர்களின் ஆதரவு தொடர்ந்து வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











