பிரைன் ஸ்ட்ரோக் வந்ததே நடிகர் லோகேஷ்.. இப்போ என்ன பண்றாரு பாருங்க.. பிரமித்த இசையமைப்பாளர்!

சென்னை: பிரைன் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்ற நடிகரும் தொகுப்பாளருமா லோகேஷின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களை திணறடித்து வருகிறது.

Recommended Video

Adithya Tv Lokesh சிகிச்சைக்கு பணம் தேவை Hospital Bill கட்ட வேண்டும்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி - நயன்தாரா இணைந்து நடித்த 'நானும் ரௌடி தான்' திரைப்படம் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இந்தப் படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் லோகேஷ் பாபு. இவர் ஆதித்யா தொலைக்காட்சியில் நிகழ்ச்சிதொகுப்பாளராக இருந்தார்.

பிரைன் ஸ்ட்ரோக்

பிரைன் ஸ்ட்ரோக்

இதனிடையே கடந்த மார்ச் மாதம், பிரைன் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் லோகேஷ். இதை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி அவரை நேரில் சந்தித்து மருத்துவ உதவிகளை வழங்கினார். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

வீட்டில் ஓய்வு

வீட்டில் ஓய்வு

அதனை பார்த்த ரசிகர்கள் லோகேஷ், விரைவில் குணமடைந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பழையப்படி பங்கேற்க் வேண்டும். படங்களில் நடிக்க வேண்டும் என பிரார்த்தித்தனர். இதன் பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன லோகேஷ் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

ரகிட ரகிட பாடல்

ரகிட ரகிட பாடல்

இந்நிலையில் நடிகர் லோகேஷின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. அதாவது அண்மையில் வெளியான ஜகமே தந்திரம் படத்தின் ரகிட ரகிட பாடலுக்கு விஜே பார்வதியுடன் டான்ஸ் ஆடி அசத்தியுள்ளார் லோகேஷ்.

ஆசம் அசைவுகள்

ஆசம் அசைவுகள்

இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் இதனை பார்த்த அப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவரை பார்த்து பிரமித்துப் போய் பாராட்டியுள்ளார். அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், டியர் லோகேஷ் சார் இதற்கு ரொம்ப நன்றி. உங்களின் ஆசம் அசைவுகளால் நீங்கள் எனர்ஜிட்டிக்காகவும், அழகாகவும் இருக்கிறீர்கள். ஒரு முழுமையான ராஜா.. சிறந்த ஆரோக்கியத்திற்கு வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

பாடல் அப்படி தலைவரே

இதனை பார்த்த ரசிகர்கள் நீங்கள் கொடுத்த பாடல் அப்படி தலைவரே என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனை பாராட்டியுள்ளனர். சிலி நெட்டிசன்கள் உங்களுடைய கவுன்டர்ஸ், காமெடிஸ் ரகளைஸெல்லாம் மிஸ் பண்றோம்.. விரைவில் குணமடைய வேண்டும் என லோகேஷையும் மிஸ் செய்துள்ளனர்.

கார்த்திக் சுப்புராஜ்

இதேபோல் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும், லோகேஷின் இந்த வீடியோவைப் பார்த்து வியந்துப் போயுள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், வாவ்.. இன்று நடக்கவேண்டிய மிகச் சிறந்த விஷயம்... அமைதியாக இருந்து வலுவான லோகேஷாக திரும்பி வாருங்கள் சார் என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X