கமல் சென்னை பாஷையில் கலக்குவதற்கு பிரபல காமெடி நடிகர் தான் காரணமாம்: இது குருவுக்கே குரு மொமண்ட்
சென்னை: ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22ம் தேதி சென்னை தினம் கொண்டாடப்படுகிறது.
சென்னை தமிழகத்திற்கு மட்டும் அல்லாமல், திரைப்படத்துறைக்கும் தலைநகராக காணப்படுகிறது.
சினிமாவில் சென்னை பாஷை பேசி அசத்தும் நடிகர் கமல்ஹாசனுக்கு, அதை கற்றுக்கொடுக்க தனியாகவே ஒரு குரு இருந்துள்ளார்.

வழக்கு மொழிக்கு மாறிய தமிழ் சினிமா
கறுப்பு வெள்ளை காலம் முதல் ஈஸ்ட்மெண்ட் கலர் திரைப்படங்கள் வரை, தமிழ்த் திரையுலகில் பெரிதாக மாற்றங்கள் ஏற்படவில்லை. இலக்கியத் தமிழிலும் உரைநடைத் தமிழிலும் தான் நடிகர், நடிகைகள் வசனம் பேசுவது வழக்கமாக இருந்தது. பாரதிராஜா, மகேந்திரன் போன்றவர்கள் இயக்குநர்களாக அறிமுகமானதும், இதில் பெரிய மாற்றங்கள் தொடங்கின. கதைக்குத் தேவையான வகையில் கிராமங்களுக்கே சென்று படப்பிடிப்பை நடத்திய அவர்கள் வசனங்களிலும் வழக்காடு மொழியை பயன்படுத்தினர்.

கவனம் ஈர்த்த சென்னை பாஷை
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பேசப்படும் தமிழை விடவும், சென்னையின் பாஷை ரொம்பவே தனித்து நின்றது. உதாரணமாக நெல்லை, கோவை, மதுரை, தஞ்சை என ஒவ்வொரு பகுதி வழக்காடு மொழிகளில் வித்தியாசம் இருந்தாலும், அதில் மரியாதையான சில வார்த்தைகள் இருக்கும். ஆனால், சென்னை பாஷை 'இன்னாமா... யோவ் வாத்தியாரே... மொள்ளமாரி..." என ஒருமையில் அழைப்பதாக இருக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால், அதன் பின்னால் இருக்கும் உரிமையும், வரலாறும் பலரும் அறிந்திடாதது.

சினிமாவில் சென்னை பாஷை
மற்ற பகுதி வழக்காடு மொழிகளைப் போலவே, சென்னை பாஷையும் மெதுவாக சினிமாவில் எட்டிப்பார்த்தது. முதலில் இந்த பாஷை ரசிகர்களுக்கு கொஞ்சம் புதுமையாக இருந்தாலும், அதில் முழுமையாக ஒன்றத் தொடங்கினர். தேங்காய் சீனிவாசன், லூசு மோகன், ஜனகராஜ் போன்ற நடிகர்கள், சென்னை பாஷையில் வெளுத்து வாங்கினர். அப்படி சென்னை பாஷையில் இவர்கள் நடித்த காமெடி காட்சிகள் சிறப்பான வரவேற்பை பெற்றன.

சென்னை தமிழின் அடையாளம் கமல்
தமிழ் சினிமாவின் மிகப் பெரிய ஆளுமையான கமல், நெல்லை தமிழ், மதுரை தமிழ், கோவை தமிழ், பாலக்காடு தமிழ், இலங்கைத் தமிழ் என எல்லா வழக்காடு மொழிகளையும் ரொம்பவே ரியாலிட்டியாக பேசி அசத்துவார். ஆனால், ஆரம்பத்தில் அவருக்கு சென்னை தமிழ் மட்டும் எட்டாக் கனியாக இருந்தது. இதனால், சென்னை பாஷையை கற்றுக்கொள்ள வேண்டும் என ரொம்பவே ஆர்வமாக இருந்தார்.

கமலுக்கு கிடைத்த குரு
கமலின் சென்னை பாஷைக்கு பிள்ளையார் சுழி போட்டது லூசு மோகன் தான் சென்னை பாஷையை அவர் லாவகமாக பேசும் அழகைப் பார்க்க, செம்ம சூப்பராக இருக்கும். லூசு மோகனை கெட்டியாகப் பிடித்துக்கொண்ட கமல், சென்னை பாஷையை அவ்வளவு நுணுக்கமாக கற்றுக்கொண்டார். அதனால் தான் இன்றும் கூட 'விக்ரம்' படத்தில் கமல் பாடிய 'பத்தல பத்தல' சாங், மொழிகளை கடந்தும் மெஹா ஹிட் அடித்தது. நடிப்பில் எல்லோருக்கும் குருவான கமலுக்கு, சென்னை பாஷை சொல்லிக்கொடுக்க லூசு மோகன் இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











