கடவுள் அருளால் மீண்டு வந்து விட்டோம்.. கொரோனா நெகட்டிவானதால் மாதவன் மகிழ்ச்சி!

சென்னை: கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ள நடிகர் மாதவன் நெகிழ்ச்சியுடன் நன்றி கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் மாதவன். கடைசியாக மாதவன் நடிப்பில் தமிழில் மாறா திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகர் மாதவன் தமிழ் மட்டுமின்றி இந்தி, கன்னடம், தெலுங்கு, இங்கிலிஷ் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

குடும்பத்தினருக்கும் கொரோனா

குடும்பத்தினருக்கும் கொரோனா

இந்நிலையில் நடிகர் மாதவனுக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தன்னை தனிமைப் படுத்திக் கொண்டார் மாதவன். அதனை தொடர்ந்து நடிகர் மாதவனின் குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கொரோனா நெகட்டிவ்

கொரோனா நெகட்டிவ்

மாதவனின் குடும்பத்தினர் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாதவன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது மாதவனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் கொரோனா தொற்று நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது.

கடந்து விட்டோம்

கடந்து விட்டோம்

இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள மாதவன், ''எனக்காக அக்கறையுடன் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அம்மா உள்பட அனைவருக்கும் கொரோனா தொற்று நெகட்டிவ் என்று வந்துள்ளது. வைரஸ் தொற்று நிலையை முற்றிலுமாக கடந்து வந்துவிட்டோம்.

ஆரோக்கியத்துடன் உள்ளோம்

கடவுள் அருளால் அனைவரும் நலமுடன் ஆரோக்கியத்துடன் இருக்கிறோம். கொரோனாவில் இருந்து மீண்டு வந்துவிட்டாலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் எச்சரிக்கையாக இருந்து வருகிறோம் என கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X