Madhavan :மாதவனுடன் கங்கணா ரனாவத் இணையும் தமிழ்ப்படம்.. யாரு டைரக்டர் தெரியுமா?
மும்பை : நடிகர் மாதவன் தமிழில் சாக்லேட் பாயாக தன்னுடைய பயணத்தை துவக்கியவர். தொடர்ந்து தற்போது தன்னுடைய கேரக்டருக்கு பலம் சேர்க்கும் வகையில் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
கடந்த ஜூன் 1ம் தேதி இவர் தனது 53வது பிறந்தநாளை கொண்டாடியுள்ள நிலையில், அடுத்தடுத்த படங்களில் இவர் கமிட்டாகி வருகிறார்.
விளம்பரப் படங்களில் நடிக்கத் துவங்கிய மாதவன், அதன்மூலம் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். சாக்லேட் பாயாக வலம் வந்தார்.
மாதவன் -கங்கணா இணையும் புதிய தமிழ்ப்படம் : நடிகர் மாதவன் விளம்பரப் படங்களில் நடித்ததன்மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்றவர். முன்னதாக பிரிட்டிஷ் ராணுவம் உள்ளிட்டவற்றிலும் இவர் பயிற்சி பெற்றுள்ளார். இந்நிலையில் பாலிவுட்டில் இஸ் ராத் கி சுபஹ் நஹி என்ற படத்தின்மூலம் சினிமாவில் இவரது என்ட்ரி அமைந்தது. கடந்த 1996ம் ஆண்டில் இந்தப்படம் வெளியானது. முன்னதாக விளம்பரங்களில் மட்டுமில்லாமல் தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில் சந்தோஷ் சிவனின் விளம்பர படத்தில் நடிக்கும் வாய்ப்பு மாதவனுக்கு கிடைக்க, இதன்மூலம் மணிரத்னம் இயக்கத்தில் அலைபாயுதே என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது. கடந்த 2000ம் ஆண்டில் இந்தப் படம் வெளியானது. ஷாலினி இந்தப் படத்தில் ஜோடியாக நடிக்க, இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரி மிகவும் சிறப்பாக அமைந்தது. படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இந்தப் படத்தின் ப்ரபோசல் சீன் இப்போதும் காதலர் தினங்களில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
இந்தக் காட்சியில் நடிக்கும்போது தான் தன்னுடைய மனைவி சரிதாவை நினைத்து நடித்ததாக மாதவன் பேட்டியொன்றில் கூறியிருந்தார். அதனால்தான் அந்தக் காட்சி அத்தனை சிறப்பாக அமைந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து கௌதம் மேனனின் அறிமுகப்படமான மின்னலே படத்தில் நடித்திருந்தார் மாதவன். இந்தப் படமும் இவரது சாக்லேட் பாய் கேரக்டரை உறுதிப்படுத்தியது.
தொடர்ந்து ஒரே மாதிரி கேரக்டர்களில் நடிக்காமல் லிங்குசாமி இயக்கத்தில் ரன் படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக தன்னை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார் மாதவன். இந்தக் கேரக்டரும் இவருக்கு அழகாக பொருந்தியது. தொடர்ந்து தென்னிந்திய மொழிப் படங்களிலும் பாலிவுட்டிலும் அடுத்தடுத்த படங்களை கமிட் செய்து நடித்து வருகிறார் மாதவன். சமீபத்தில் இவரது நடிப்பு மற்றும் இயக்கத்தில் ராக்கெட்ரி :நம்பி விளைவு என்ற படம் வெளியாகி வரவேற்பையும் விருதுகளையும் பெற்று வருகிறது.
இந்நிலையில் அடுத்ததாக தமிழில் நேரடி படம் ஒன்றில் இவர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் இவருக்கு பாலிவுட் நடிகை கங்கணா ரனாவத் நடிக்கவுள்ளதாகவும் தற்போது கூறப்பட்டுள்ளது. ட்ரிடன்ட் ஆர்ட்ஸ் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் இயக்குநர் யார் என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் மூலம் மாதவன் மற்றும் கங்கணா ரனாவத் மூன்றாவது முறையாக இணையவுள்ளனர்.


Click it and Unblock the Notifications











