Nayanthara : ஜோடி பொருத்தம் சூப்பர்.. மாதவன், நயன்தாரா நடிக்கும் படத்தின் டைட்டில் என்ன தெரியுமா?

சென்னை : நடிகை நயன்தாரா மற்றும் மாதவன் இணைந்து நடிக்கும் புதிய படம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நானும் ரௌடிதான் திரைப்படத்தில் நடித்த போது விக்னேஷ் சிவனை காதலித்தார் நயன்தாரா. ஜோடிப்புறாவாக பல இடங்களில் சுற்றித்திரிந்த இவர்கள் கடந்த ஜூன் மாதம் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டனர்.

Actor Madhavan and nayanthara new movie title name

இதையடுத்து, வாடகைத் தாய் மூலம் சமீபத்தில் இரட்டைக் குழந்தைகளுக்கு தாய் ஆனார் நயன்தாரா.

Actor Madhavan and nayanthara new movie title name

நடிகை நயன்தாரா : அண்மையில் நயன்தாரா நடிப்பில் கனெக்ட் திரைப்படம் வெளியானது. திகில், அமானுஷ்யமான இந்த படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நயன்தாரா லீட்ரோலில் நடித்திருந்தார். திகில் திரைப்படம் என்பதால் இந்த படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறமுடியாமல் போனதால் நயன்தாரா அடுத்து ஒரு வெற்றி படத்தை கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

இறைவன் : தற்போது நயன்தாரா, ஜெயம்ரவியுடன் இறைவன் படத்தை முடித்துள்ளார். தனி ஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியும், நயன்தாராவும் மீண்டும் இந்தப் படத்திற்காக இணைந்துள்ளனர். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும், அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். விரைவில் இதன் கடைசிக்கட்ட படப்பிடிப்பில் பங்கேற்க இருக்கிறார்.

Actor Madhavan and nayanthara new movie title name

தி டெஸ்ட் : இந்நிலையில் அறிமுக இயக்குநர் சஷிகாந்த் இயக்கத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் சித்தார்த் முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார் என்கிறார்கள். கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படம் பெரிய பொருட்செலவில் தயாராக உள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். 'தி டெஸ்ட்' என்ற தலைப்பில் உருவாகும் இந்த படம் முழுக்க முழுக்க டெஸ்ட் கிரிக்கெட் கதைக்களம் கொண்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்கவுள்ளது.

ஜிடி நாயுடு பயோபிக் : வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் திரைப்படங்களில் நடித்து வரும் மாதவன். சமீபத்தில் ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணன் பயோபிக்கை இயக்கி நடித்திருந்தார்.‌ இந்த படத்தின் வரவேற்பிற்கு பிறகு விஞ்ஞானி ஜிடி நாயுடு வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கவுள்ளார்.‌ இது குறித்த தகவல்கள் சமீபகாலமாக வெளியாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X