மகிழ்ச்சியான இசையுடன் கூடிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் -மாதவன் பிறந்தநாளில் குவியும் வாழ்த்துக்கள்
மும்பை : நடிகர் மாதவன் தனது 51வது பிறந்தநாளை இன்றைய தினம் கொண்டாடி வருகிறார்.
Recommended Video
இதையொட்டி திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பாலிவுட் மற்றும் கோலிவுட் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில் அவர்கள் அனைவருக்கும் அவர் தனித்தனியாக நன்றிகளை தெரிவித்து வருகிறார்.

51வது பிறந்தநாள்
நடிகர் மாதவன் கோலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் சிறப்பாக நடித்து வருபவர். சாக்லேட் பாயாக அறிமுகமான இவரது நடிப்பு தற்போது மிகவும் பண்பட்டுள்ளது. வேதா, மாறா உள்ளிட்ட சிறப்பான படங்களை தொடர்ந்து கொடுத்து வருகிறார். இந்நிலையில் இன்றைய தினம் தனது 51வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

பிரதமர் வாழ்த்து
இதையொட்டி அவருக்கு ட்விட்டர் பக்கத்திலும் நேரிலும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், இருவரும் இணைந்துள்ள புகைப்படத்தை இணைத்து மியூசிகல் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நடிகர் ஆர்யாவும் ட்விட்டர் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பல்வேறு அவதாரங்கள்
நடிகர் ஹரீஷ் கல்யாணும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மாதவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். லவ்வர் பாய், கேங்ஸ்டர் என ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக பல்வேறு அவதாரங்களை எடுத்துள்ளதாக மாதவனுக்கு பாராட்டு தெரிவித்த அவர் தொடர்ந்து சிறப்பான படங்களில் நடிக்க வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சாம் சிஎஸ் வாழ்த்து
தொடர்ந்து சன் பிக்சர்ஸ், ஸ்டூடியோ க்ரீன், 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனங்களும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. மியூசிக் டைரக்டர் சாம் சிஎஸ் மாதவனுக்கு இந்த ஆண்டு முழுவதும் சந்தோஷம் நிரம்பி இருக்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அனுஷ்கா ஷெட்டி வாழ்த்து
நடிகர் கௌதம் கார்த்திக், நடிகை சிவபதா, அனுஷ்கா ஷெட்டி, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்டவர்களும் தங்களது ட்விட்டர் பக்கங்களில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவருக்கும் தனித்தனியாக நடிகர் மாதவன் தன்னுடைய நன்றிகளை தெரிவித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











