So So Proud.. அஜித் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஜாய்ன் ஆன பிரபல நடிகர்.. அட பேமிலியே அங்கதான் இருக்கு!

சென்னை: நடிகர் அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றன. இம்மாத இறுதியில் விடாமுயற்சி படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் வரும் ஏப்ரல் 10ம் தேதி குட் பேட் அக்லி படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படங்களின் வேலையை முடித்துக் கொடுத்துள்ள அஜித்குமார் தன்னுடைய கனவுகளை நோக்கிய பயணத்திற்காக துபாயில் உள்ளார்.

துபாயில் நடந்துவரும் கார் ரேஸிங்கிற்காக கடந்த சில தினங்களாகவே அஜித் துபாயில் இருந்த நிலையில், தற்போது இதன் போட்டிகள் நடந்துள்ளன. இதற்கான பயிற்சியில் ஈடுபட்ட போது கடந்த சில தினங்களுக்கு முன்பு அஜித்தின் கார் விபத்திற்குள்ளானது. இதையடுத்து இதன் ஒரு போட்டியிலிருந்து அஜித் விலகியிருந்தார்.

ajithkumar madhavan dubai car racing

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளன. விடாமுயற்சி படம் பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த ரேஸிலிருந்து விலகியுள்ளது. படம் இம்மாத இறுதியில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே அஜித்தின் குட் பேட் அக்லி படம் ஏப்ரல் 10ம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் கழித்து அஜித்தின் படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகவுள்ளது அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளன. இந்த இரு படங்களின் வேலைகளை ஒட்டுமொத்தமாக முடித்துக் கொடுத்துள்ள அஜித், தற்போது துபாயில் நடைபெறும் ரேஸிங்கில் பங்கேற்க சென்றுள்ளார்.

ரசிகர்களுக்கு அஜித் கோரிக்கை: இதையொட்டி அஜித் அடுத்தடுத்த பயிற்சிகளில் ஈடுபட்ட நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது கார் விபத்தில் சிக்கியது. இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆயினும் மறுநாளே அடுத்தக்கட்ட பயிற்சிகளில் அஜித் ஈடுபட்டதை பார்க்க முடிந்தது. இதையடுத்து அவர் ஒரு போட்டியிலிருந்து விலகியதையும் பார்க்க முடிந்தது. ரேஸ் நடக்கும் இடத்தில் அஜித்தின் ஏராளமான ரசிகர்கள் குவிந்த நிலையில், அவரவர் தங்களின் குடும்பத்தின்மீது கவனம் செலுத்த வேண்டும் என்று அஜித் வீடியோ மூலம் அறிவுறுத்தியிருந்தார்.

ajithkumar madhavan dubai car racing

அஜித் அணி வெற்றி: இதனிடையே இன்றைய தினம் நடந்த 24H ரேஸில் அஜித்தின் ரேஸிங் அணி 922 போர்ஷே பிரிவில் 3வது இடத்தை பிடித்துள்ளது. இந்த வெற்றியை இந்தியாவின் தேசிய கொடியை ஏந்தி உற்சாகத்துடன் அஜித் கொண்டாடியதை பார்க்க முடிந்தது. இதனிடையே இந்தப் போட்டியை நேரில் சென்று என்ஜாய் செய்த பிரபல நடிகர் மாதவன், அவரை உற்சாகத்துடன் பாராட்டி வாழ்த்தினார். மேலும் அஜித்துடன் தான் இருக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அஜித் குறித்து தான் பெருமைப்படுவதாகவும் என்ன ஒரு மனிதர் என்றும் உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளார்.

அஜித்திற்கு மாதவன் பாராட்டு: மாதவனுடன் அஜித்தின் மனைவி ஷாலினி, மகன் மற்றும் மகள் என அனைவரும் அஜித்தின் இந்த வெற்றி தருணத்தில் உடனிருந்தனர். அவர்களும் தங்களின் சந்தோஷத்தை கொண்டாட்டத்துடன் பகிர்ந்தனர். இதன் வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிகவும் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அஜித் தன்னுடைய மகன் ஆத்விக்குடன் இந்த வெற்றியை கொண்டாடியதையும் பார்க்க முடிந்தது. நடிகராக இருந்த போதிலும் தன்னுடைய பேஷனை நோக்கிய பயணத்தில் தன்னை சிறப்பாக இணைத்துக் கொண்டுள்ளார் அஜித். தொடர்ந்து அடுத்தடுதுது கட்டங்களில் பயணிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X