Surya43: சூர்யாவுடன் இணையும் மாதவன்.. எந்தப் படத்துல தெரியுமா?

சென்னை: நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் கோவா உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் இரண்டாவது முறையாக இணையவுள்ளார் சூர்யா.

முன்னதாக இந்தக் கூட்டணியில் வெளியான சூரரைப் போற்று படம் சிறப்பான வரவேற்பை பெற்றதுடன் தேசிய விருதுகளையும் அள்ளியது.

Actor Madhavan going to join with Actor Surya in his Surya43 movie?

சூர்யா 43 படத்தில் இணையும் மாதவன்?: நடிகர் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கங்குவா படத்தை இயக்கி வருகிறார் சிவா. வரலாற்றுப் பின்னணியில் உருவாகி வரும் இந்தப் படத்தின் சூட்டிங்கை அடுத்த மாதத்திற்குள் நிறைவு செய்ய படக்குழு திட்டமிட்டு உழைத்து வருகிறது. கோவா, கொடைக்கானலின் அடர்ந்தப் பகுதிகளில் படத்தின் சூட்டிங் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருசில காட்சிகள் வெளிநாட்டிலும் திட்டமிடப்பட்டுள்ளன.

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் இணையவுள்ளார் நடிகர் சூர்யா. முன்னதாக இந்தக் கூட்டணி சூரரைப் போற்று படத்தில் இணைந்திருந்தது. இந்தப் படம் பயோ பிக்காக வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. ஓடிடியில் வெளியான இந்தப் படம் தேசிய விருதுகளையும் குவித்தது. தயாரிப்பாளராகவும் நடிகராகவும் இந்தப் படம் சூர்யாவிற்கு சிறப்பாக கைக்கொடுத்தது.

இதையடுத்து சூரரைப் போற்று படத்தை இந்தியின் நடிகர் அக்ஷய் குமாரை வைத்து இயக்கி முடித்துள்ளார் சுதா கொங்கரா. இந்தப் படத்தை இந்தியில் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், படத்தில் சிறப்பான கேமியோ கேரக்டரில் சூர்யா நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் தன்னுடைய சூர்யா 43 படத்திற்காக இணையவுள்ளார் சூர்யா.

இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ள நிலையில், இந்தப் படத்தின் நடிகர், நடிகைகள் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் வெளியானவண்ணம் உள்ளது. இந்தப் படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா உள்ளிட்டவர்கள் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சூர்யாவிற்கு வில்லனாக நடிக்க பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவிடமும் பேசப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இவர் நடிகை தமன்னாவின் காதலர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் படத்தில் நடிகர் மாதவனும் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் கேமியோ ரோல் என்பதால் மாதவன் தயக்கம் காட்டுவதாகவும் ஆனால் சூர்யா மற்றும் மாதவன் இருவரும் மிகச்சிறந்த நண்பர்கள் என்றும் அதனால் சூர்யாவுடன் நடிக்க மாதவன் கண்டிப்பாக ஓகே சொல்வார் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் ராக்கெட்ரி படத்திற்கு சமீபத்தில் கிடைத்துள்ள வரவேற்பு காரணமாக மாதவன் கேமியோ ரோலில் நடிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X