உங்களுக்கு சாப்பிட மட்டும்தான் தெரியுமா… நர்ஸின் கண்ணீர் வீடியோ… மன்னிப்பு கேட்ட மாதவன் !
சென்னை : கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல மாநிலங்களில ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது கொரோனா பரவல் படிப்படியாக கட்டுக்குள் வந்து கொண்டு இருக்கிறார்.
கடந்த 24 மணி நேரத்தில் 2,59,591 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 3,57,295 பேர் நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தாலும் மக்கள் மத்தியில் இன்னமும் அலட்சியம் காட்டப்பட்டு வருகிறது.இதனால் அரசும் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது அவசியம்.

வாழ்வாதாரம்
கொரோனாவின் 2வது அலை மிக வேகமாக பரவி அனைத்து தரப்பு மக்களையும் புரட்டிப்போட்டுள்ளது. ஊரடங்களால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த தவிர்து வருகின்றனர். தொழிலதிபர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் உதவி செய்து வருகின்றனர்.
ஆவேசமான பேச்சு
இந்நிலையில், கடந்த சில நாட்களாக சமூகவலைத்தளத்தில் ஒரு நர்ஸ் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மருத்துவமனையில் இடம் இல்ல, ஆக்ஸிஜன் இல்ல, நர்ஸ் சரியா பாத்துக்கல, டாக்டர் சரியா பாத்துக்கல இப்படியோ குற்றம் சொல்றீங்கலே. உங்களுக்கு அறிவு இருக்கா என்று ஆவேசமாக பேசத் தொடங்கினார்.

சாப்பிடத்தான் தெரியுமா
வீட்டில் இருங்க, வெளியவராதீங்க, மாஸ்க் போடுங்க, கை கழுவுங்கனு எத்தனை முறை சொன்னோம் யாராவது கேட்டீங்களா. எல்லாரும் ரோட்டுலத்தனே இருந்தீங்க.. இறைஞ்சி கடையில கூட்டம், மீன் கடையில கூட்டம், காய்கறி கடையில கூட்டம் உங்களுக்கு எல்லாம் சாப்பிட மட்டும்தான் தெரியுமா என்று கோபத்துடன் கேட்டுள்ளார்.

எங்களுக்கும் வலிக்கும்
ஆம்புலன்ஸ் டிரைவர், சி.டி ஸ்கேன் தொழிலுநுட்ப வல்லுநர், ஆய்வக உதவியாளர் மற்றும் மருந்தாளர்கள் இப்படி இன்னும் எத்தனை பேர் இறந்து இருக்காங்கனு தெரியுமா. எத்தனை பேர் இறந்தாங்கனு எண்ணிக்கைக்கூட இல்ல. நாங்க பாத்துக்கிட்ட ஒரு நோயாளி இறந்த அதிலிருந்து மீள 10நாள் ஆகும். தினம் 10 நோயாளி இறந்து போராங்க நாங்களும் மனுஷங்கதான் எங்களையும் புரிஞ்சிங்கோங்க. தயவு செய்து வீட்டில் இருங்க என்று கண்ணீர் மல்க கூறுவார் இந்த வீடியோ இணையத்தில் மிகவும் வைரலானது.

மன்னியுங்கள் சகோதரி
இந்த வீடியோக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள மாதவன், தயவு செய்து எங்களை மன்னியுங்கள் நாங்கள் உங்களுக்கு நிச்சயமாக கடன்பட்டிருக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார். இதற்கு பலரும் தங்கள் கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications