Madhavan: அஜித்தோட ரொம்ப பெரிய ரசிகன் நான்.. அவரை ரசிக்க இதுதான் காரணம்.. சொன்னது யார் தெரியுமா?

சென்னை: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களுக்காகத்தான் ரசிகர்கள் வெயிட்டிங். அவர்களின் இரண்டுவருட காத்திருப்பிற்கு பலனாக அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகவுள்ளது மிகப்பெரிய கொண்டாட்டங்களை கொடுத்துள்ளது. இந்தப் படங்களின் கொண்டாட்டங்களுடன் அவரது ரேஸிங் பயணத்திற்கும் ரசிகர்கள் சப்போர்ட் செய்து வருகின்றனர்.

இதனிடையே அடுத்ததாக அஜித் தன்னுடைய ஏகே64 படத்திற்காக எந்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருடன் இணைவார் என்பது குறித்தும் பல்வேறு யூகங்கள் வெளியாகி வருகின்றன. முன்னதாக பில்லா, ஆரம்பம் என அடுத்தடுத்த அதிரடி சரவெடிகளை அஜித்துடன் இணைந்து கொடுத்த விஷ்ணுவர்தன் அடுத்ததாக ஏகே 64 படத்தை இயக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ajithkumar madhavan dubai

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித்குமார் 30 ஆண்டுகளைக் கடந்த தன்னுடைய திரைப் பயணத்தை மிகவும் சிறப்பாக்கியுள்ளார். அவரது பல படங்கள் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பையும் தல என்ற பட்டப் பெயரையும் பெற்றுக் கொடுத்தன. அந்த பட்டத்தை அவர் வேண்டாம் என்று கூறியது வேறு கதை. ஆயினும் அவரை தலயாகவே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் அவர் துபாயில் ரேஸிங்கில் ஈடுபட்டிருந்த போது கூட அந்த அடைமொழியோடு அவரை அழைத்து தங்களது உற்சாக கொண்டாட்டத்தை பகிர்ந்து கொண்டனர். அஜித் மட்டுமே இளம் நடிகர்கள் மட்டுமில்லாமல் மூத்த நடிகர்களாலும் கொண்டாடப்படுபவராக தொடர்ந்து இருந்து வருகிறார்.

விடாமுயற்சி படம்: தன்னுடைய ரசிகர்களின் நலனில் அதிகமான கவனத்தை மற்றும் அக்கறையை தொடர்ந்து செலுத்தி வருகிறார் அஜித். அவரது நடிப்பில் அடுத்தடுத்து விடா முயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்கள் ரிலீஸ்க்கு தயாராகியுள்ள நிலையில் வரும் பிப்ரவரி 6ம் தேதி திரையரங்குகளை முற்றுகையிட உள்ளது விடா முயற்சி. இந்த படத்தை கொண்டாட்டத்துடன் எதிர் கொள்ள அவரது ரசிகர்கள் தயாராகியுள்ள நிலையில் படம் மிகப்பெரிய வெற்றியை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட காலங்களாக ஷூட்டிங் தாமதம், நிதி பிரச்சனை என பல்வேறு சூழல்களில் சிக்கி இந்த படத்தின் ரிலீஸ் தாமதம் ஆனது.

கார் ரேஸிங்கில் அஜித்: பொங்கல் கொண்டாட்டமாக வெளியாக இருந்த விடாமுயற்சி படம் சற்று தள்ளி தற்போது பிப்ரவரி 6ம் தேதி ரிலீசாக உள்ளது. முன்னதாக தடம் உள்ளிட்ட பல படங்களில் முத்திரை பதித்த மகிழ் திருமேனி, இந்தப் படத்தில் அஜித் போன்ற முன்னணி நடிகரை இயக்க கிடைத்த வாய்ப்பை கண்டிப்பாக சிறப்பாக பயன்படுத்தி இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகமாக காணப்படுகிறது. தற்போது கார் ரேஸிங்கிற்காக துபாயில் உள்ளார் அஜித்.

நடிகர் மாதவன் பாராட்டு: அவர் ரசிகர்களுடன் அடுத்தடுத்த சந்திப்புகளை கொண்டாட்டங்களை மேற்கொண்டு வருவதையும் வீடியோக்கள் மூலம் பார்க்க முடிகிறது. முன்னதாக அஜித்தின் ரேஸிங் அணி, போட்டியொன்றில் பங்கேற்று வெற்றி பெற்றது. இதன்போது அங்கு மாதவன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் அஜித் அணியை மற்றும் அஜித்தை உற்சாகப்படுத்தியதும் அரங்கேறியது. இந்நிலையில் தன்னுடைய பேட்டியொன்றி பேசியுள்ள நடிகர் மாதவன், தான் அஜித்தின் மிகப்பெரிய ரசிகர் என்று கூறியுள்ளார். அவரது வெற்றி மட்டுமே தன்னை கவரவில்லை என்றும் அவர் அந்த வெற்றியை பெறும்விதம்தான் தன்னை மிகப்பெரிய அளவில் கவர்ந்துள்ளதாகவும் மாதவன் தெரிவித்துள்ளார். அஜித்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்ற மாதவன், தான் அஜித்தின் ஃபேன் என்றும் தன்னை அவரது ரசிகராகவே இருக்க விடுங்கள் என்றும் கூறியதை பார்க்க முடிந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X