Actor Madhavan: நான்தான் சைத்தான்.. மாதவன் -ஜோதிகா நடிக்கும் சைத்தான் படத்தின் ரிலீஸ்!

மும்பை: டும் டும் டும், பிரியமான தோழி போன்ற படங்களில் இணைந்து நடித்த ஜோடி மாதவன் மற்றும் ஜோதிகா. இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரி அந்த காலக்கட்டங்களில் மிகச்சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றிருந்தது. இவற்றில் கடந்த 2001ம் ஆண்டில் வெளியான டும் டும் டும் படத்தில் இவர்கள் இருவரின் ஜோடி படத்திற்கு புதிதான ஒரு ஃப்ரெஷ்னஸ்ஸை கொடுத்தது. அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பால் இந்தப் படத்தை வெற்றிப்படமாக்கியிருந்தனர். இந்தப் படங்களை தொடர்ந்து தற்போது நீண்ட ஆண்டுகள் கழித்து இவர்கள் இருவரின் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள படம் சைத்தான்.

இந்திப் படங்களில் நடித்தே தன்னுடைய அறிமுகத்தை துவங்கியவர் நடிகை ஜோதிகா. அவர் தற்போது 26 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியில் சைத்தான் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இந்தப் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். படத்தில் அஜய் தேவ்கனும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். பிளாக் மேஜிக் உள்ளிட்டவற்றை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம் கன்பத் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள விகாஸ் பால் இயக்கத்தில் ஹாரர் திரில்லராக சைத்தான் படம் ரிலீசாகவுள்ளது. படத்தின் டீசர் கடந்த மாதத்தில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Actor Madhavan -Jyotika movie Shaitaan release date confirmed with poster by Madhavan

மாதவன் -ஜோதிகா ஜோடி: நடிகர் மாதவன் மற்றும் ஜோதிகா ஜோடி டும் டும் டும், பிரியமான தோழி போன்ற படங்களில் இணைந்து நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தது. இந்தப் படங்களில் இவர்களின் கெமிஸ்ட்ரி பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தது. இதில் டும் டும் டும் படத்தில் இவர்களின் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நின்று போக, தொடர்ந்து இவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் காதலை கதைக்களமாக கொண்டிருந்தது. இந்தப் படத்தில் மாதவன் மற்றும் ஜோதிகா இருவரும் போட்டிப் போட்டுக் கொண்டு நடித்திருந்தனர். அவர்களின் இந்த உழைப்பையும் நடிப்பையும் ரசிகர்கள் கொண்டாடினர்.

சைத்தான் படம்: இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரும் மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளனர். பாலிவுட்டில் சைத்தான் என்ற படத்தில் இவர்கள் இருவரும் தற்போது இணைந்து நடித்துள்ளனர். ஆனால் ஜோடிகளாக இல்லாமல் இந்தப் படத்தில் மாதவன்தான் வில்லன். சூப்பர் 30, கன்பத் போன்ற படங்களை இயக்கி கவனம் பெற்றுள்ள விகாஸ் பால் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். குஜராத்தி மொழியில் வெளியாகி மிகுந்த வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்த வாஷ் என்ற படத்தின் ரீமேக்காக இந்தப் படம் தற்போது உருவாகியுள்ளது. பில்லி, சூனியம் என்று கூறப்படும் பிளாக் மேஜிக்கை மையமாக வைத்து ஹாரர் திரில்லர் ஜானரில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

மார்ச் 8ல் ரிலீஸ்: படம் வரும் மார்ச் 8ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ள நடிகர் மாதவன், நான்தான் சைத்தான் என்று கேப்ஷனில் கூறியுள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதை வெளிப்படுத்தும் வகையில் போஸ்டரையும் அவர் வெளியிட்டுள்ளார். படத்தின் டீசர் முன்னதாக வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே இந்தப் படம் நடிகை ஜோதிகாவிற்கு பாலிவுட்டில் மிகப்பெரிய ரீ என்ட்ரியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருமணம், குழந்தைகள் என்று சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த ஜோதிகா தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

சைத்தான் படத்தின் கதை: தமிழில் மட்டுமில்லாமல் மலையாளத்திலும் சமீபத்தில் மம்முட்டியுடன் இணைந்து காதல் தி கோர் படத்தில் நடித்திருந்தார். இதனிடையே தற்போது இந்தியிலும் இவருக்கு சிறப்பான கம்பேக் அமைந்துள்ளது. இதனிடையே, மாதவன் கூறியுள்ளபடி இந்தப் படத்தில் அவர்தான் சைத்தான். அஜய் தேவ்கன் மற்றும் ஜோதிகா தம்பதி தங்களின் குழந்தைகளுடன் விடுமுறைக்காக தொலைதூரத்தில் இருக்கும் கிராமத்திற்கு செல்கின்றனர். அங்கு மாதவனின் பில்லி சூனியத்தில் சிக்கி அஜய் தேவ்கன் மற்றும் அவரது குடும்பத்தினர் பிரச்சினைக்குள்ளாகுவதும் அதிலிருந்து மீள்வதும்தான் இந்தப் படத்தின் கதை. படத்தின் டீசர் ஏராளமானவர்களை கவர்ந்த நிலையில், படமும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X