சாக்லேட் பாயும்.. சமந்தா கேர்ளும்.. முதல் முறையாக இணைந்து...!

சென்னை : ராஜாவாக மாதவனும் ராணியாக சமந்தாவும் இணைந்து இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.

சாக்லேட் பாய் என்று தமிழ் ரசிகர்களால் அழைக்கப்படுபவர் மேடி என்ற மாதவன். தனது முதல் திரைப்படமாக மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே படத்தில் நடித்தார் மாதவன். முதல் திரைப்படமே மணிரத்னம் திரைப்படம் அடித்தது லக் என்று பலரும் கூறினார்கள். தமிழில் அறிமுகமான முதல் படமே ஹிட்.

Actor madhavan Next movie?

இப்படம் மூலமே இவருக்கு சாக்லேட் பாய் என்று பெயர் வந்தது. இதன் பின் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய மின்னலே படத்தில் நடித்தார். இப்படமும் மிகப் பெரிய வெற்றி பெற்றது. அழகம் பெருமாள் இயக்கத்தில் ஜோதிகா உடன் டும் டும் டும் இதன் பின் இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் இயக்கிய பார்த்தாலே பரவசம் படத்தில் நடித்தார் மாதவன்.

வரிசையாக ஹிட் படங்களாக கொடுத்து வந்தார் மாதவன். மீண்டும் இயக்குனர் மணிரத்னம் உடன் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இணைந்தார் மாதவன். இதனை அடுத்து லிங்குசாமி இயக்கிய ரன் படத்தில் நடித்தார். இப்படம் பெரும் வெற்றி பெற்றது மாதவனும் முன்னணி நடிகர் ஆனார். பல இந்தி படங்களில் நடித்து வந்தார்.

இவருக்கு தமிழில் ரீஎன்ட்ரி கொடுத்த திரைப்படம் இறுதிசுற்று. தற்போது நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து வருகிறார்கள் அதில் மாதவன் நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே தற்போது சமூக வலை தளங்களில் மாதவன் ராஜா வேடத்திலும் சமந்தா ராணி வேடத்திலும் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. இது இவர்கள் இருவரும் இணையும் அடுத்த படத்திற்காகவா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இவர்கள் இருவரும் இணைந்ததால் மகிழ்ச்சி என்று மாதவன் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X