வயசானாலும் குதிப்பேன்.. ஜாக்கி சானின் அதிரடியான ‘வான்கார்ட்’ டிரெய்லரை வெளியிட்ட மாதவன்!

சென்னை: ஜாக்கி சானின் புதிய திரைப்படமான வான்கார்ட் திரைப்படத்தின் அதிரடியான தமிழ் டிரெய்லரை நடிகர் மாதவன் தற்போது வெளியிட்டுள்ளார்.

66 வயதிலும் இப்படி ஆக்‌ஷன் காட்சிகளில் அசத்த முடியும் என்றால் அது நம்ம ஜாக்கி சானால் தான் சாத்தியம்.

ஒவ்வொரு காட்சியும் ஆக்‌ஷன் அதிரடியாக இருக்கும் வான்கார்ட் டிரெய்லர் சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகிறது.

அதிரடி மன்னன்

அதிரடி மன்னன்

ஸ்டன்ட் கலைஞராக புரூஸ்லி படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்த ஜாக்கி சான், சர்வதேச சூப்பர் ஸ்டாராகவும் அதிரடி மன்னனாகவும் தனது விடா முயற்சியால் முன்னேறியது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஜாக்கி சான் போல இன்னொரு நடிகரால் ஸ்டன்ட் செய்ய முடியுமா? என்கிற அளவுக்கு ஏகப்பட்ட ரிஸ்க் காட்சிகளில் நடித்து வியக்க வைத்துள்ளார்.

சர்வதேச சூப்பர்ஸ்டார்

சர்வதேச சூப்பர்ஸ்டார்

சினிமாவில் சண்டை காட்சிகள், பாடல் காட்சிகள் வந்தாலே தம் போட ஒரு குரூப் வெளியேறிவிடும். ஆனால், அந்த சீனே ஜாக்கி சான் படங்களில் நடக்காது. சண்டை காட்சிகளையும் ரசிகர்கள் ரசிக்கும் படி பக்கா காமெடியாகவும், சுவாரஸ்யமாகவும் செய்தே சர்வதேச சூப்பர்ஸ்டாராக இன்னமும் ஜாக்கி சான் திகழ்ந்து வருகிறார்.

வான்கார்ட் டிரெய்லர்

இயக்குநர் ஸ்டான்லி டாங் இயக்கத்தில் ஜாக்கி சான் நடிப்பில் உருவாகியுள்ள வான்கார்ட் படத்தின் அதிரடியான தமிழ் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா திரைப்படமாக ஜாக்கி சானின் புதுப்படமான வான்கார்ட் ரிலீசாகிறது.

மாதவன் ரிலீஸ்

மாதவன் ரிலீஸ்

யுனிவர்சல் சூப்பர்ஸ்டார் ஜாக்கி சானின் வான்கார்ட் திரைப்படத்தின் டிரெய்லரை தமிழில் ரிலீஸ் செய்வதில் ரொம்பவே சந்தோஷம் என நடிகர் மாதவன் தனது ட்விட்டரில் பதிவிட்டு இந்த டிரெய்லரை வெளியிட்டுள்ளார். ஜாக்கி சானின் புதிய படத்தின் டிரெய்லரை பார்த்த ரசிகர்கள் அதனை வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

வயசானாலும் குதிப்பேன்

வயசானாலும் குதிப்பேன்

டிரெய்லரில் பெரிய மாடியில் இருந்து ஜாக்கி சான் குதிக்க முற்படும் போது, லிப்டில் போகலாம் என காவல் அதிகாரி கூற, வயசானாலும் நான் குதிப்பேன் என ஜாக்கி சான் சொல்லும் வசனம் அசத்தல். டிரெய்லரின் ஆரம்பத்தில் கார் ஒன்றில் லாவகமாக ஏறி ஜாக்கி அமரும் காட்சி அட்டகாசம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X