"அவதாரில் நானும் ஒரு பார்ட்"..வித்தியாசமான கெட்டப்பில் மாதவன்.. வைரலாகும் வீடியோ !
சென்னை : மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்ற "சார்லி" திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான "மாறா" என்ற திரைப்படத்தில் நடித்து வரும் மாதவன் இப்பொழுது நானும் அவதாரில் ஒரு பார்ட் என அவதார் லுக்கில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
இறுதிச்சுற்று, விக்ரம் வேதா என இவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப் படங்களும் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் இப்பொழுது ஒரு புதிய படம் ஒன்றை இயக்கி தயாரித்து நடித்து வருகிறார்.
இவ்வாறு மாதவன் அடுத்தடுத்து நடிக்கும் திரைப்படங்களில் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே கூடிக் கொண்டே போக இப்போது அவதார் கெட்டப்பில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கும் நிலையில் இப்பொழுது இந்த அவதார் வீடியோ வைரலாகி வருகிறது.

கனவுக் கண்ணனாக
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகாலமாக பெண்களின் கனவுக் கண்ணனாக வலம் வந்துகொண்டிருக்கும் நடிகர் மாதவன், தமிழில் அலைபாயுதே திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் செய்யப்பட்டார்.

சாக்லேட் பாயாக
இயக்குனர் மணிரத்னம் இயக்கிய இருந்த அலைபாயுதே திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் முதல் திரைப்படத்திலேயே மாதவன் பெரும் பெண் ரசிகைகள் கூட்டத்தை பெற்று 90ஸ் பெண்களின் கனவு கண்ணனாகவும், சாக்லேட் பாயாகவும் வலம் வர ஆரம்பித்து இன்று வரை அது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

சீரியல்களிலும் திரைப்படங்களிலும்
அலைபாயுதே திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடித்த மின்னலே, கன்னத்தில் முத்தமிட்டால், டும்டும்டும், ரன் என அடுத்தடுத்த திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றி பெற தமிழில் முன்னணி நடிகரானார். இவ்வாறு தமிழில் மிக பிஸியாக நடித்து வந்த இவர் ஆரம்பத்திலிருந்தே ஹிந்தி சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்து வர ஹிந்தியிலும் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து அங்கும் தனது வெற்றிக் கொடியை நாட்டினார்.

ரஃப் அண்ட் டஃப்பாக
3 இடியட்ஸ், தானு வெட்ஸ் மானு என பல ஹிந்தி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற மாதவன் கிட்டத்தட்ட ஆறுக்கும் மேற்பட்ட மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து உள்ளார். இவ்வாறு சாக்லேட் பாயாக பல ஆண்டுகளாக வலம் வந்த மாதவன் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தின் மூலம் வித்தியாசமான கெட்டப்பில் ரஃப் அண்ட் டஃப்பாக வந்து ரசிகர்களை மிரட்டி இருந்தார்.

முதல்முறையாக இணைந்தார்
இறுதிச்சுற்று திரைப்படத்தில் பாக்ஸிங் கோச்சராக முதல் முறையாக இவர் நடித்திருக்க அந்த திரைப்படம் தமிழ் மற்றும் ஹிந்தியில் மிகப்பெரிய வெற்றிபெற்றது. இறுதிச்சுற்று வெற்றியை தொடர்ந்து சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த மாதவன் விஜய் சேதுபதியுடன் இணைந்து விக்ரம் வேதா என்ற மெஹா ஹிட் வெற்றி படத்தில் முதல்முறையாக இணைந்தார்.

சிம்ரன் இவருக்கு ஜோடியாக
இவ்வாறு தனது ஒவ்வொரு திரைப் படங்களின் மூலம் ரசிகர்களை மிரள வைத்து வரும் மாதவன் இப்பொழுது ஒரு புதிய படத்தை தனது சொந்த தயாரிப்பில் இயக்கி நடித்து வருகிறார் அந்த படத்தில் சிம்ரன் இவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

அவதாரில் நானும் ஒரு பார்ட்
இவ்வாறு அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வரும் மாதவன் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவதார் கெட்டப்பில் ஒரு செமையான வீடியோ ஒன்றை செய்து அதை பதிவிட்டவாறு நானும் இப்பொழுது அவதாரமாக மாறிவிட்டேன், " அவதாரில் நானும் ஒரு பார்ட் " என கூறியவாறு வெளியிட்டிருக்கும் இந்த வித்தியாசமான அவதார் வீடியோ இப்பொழுது சமூக வலைதளங்களில் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











