ரசிகை அனுப்பிய ஹாட் போட்டோ... பார்த்து பார்த்து கண்ணீர்விட்ட மாதவன்..!

இரண்டு வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட நடிகர் மாதவனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

சென்னை: உடல் எடை குறைத்து ஸ்டைலாக காட்சியளிக்கும் நடிகர் மாதவனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

மணிரத்னத்தின் அலைபாயுதே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் மாதவன். முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் என்பதால் ஓவர்நைட்டில் பெரிய ஸ்டார் ஆகிவிட்டார்.

மின்னலே, ரன், டும் டும் டும் என தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து, இளம்பெண்களின் கனவுக்கண்ணாக திகழ்ந்தவர் அவர். இன்று வரையில் மாதவன் மீது பெண்களுக்கு ஒரு க்ரஷ் இருந்து கொண்டே தான் இருக்கிறது.

 ரொமான்ஸ் ஸ்பெஷலிஸ்ட்

ரொமான்ஸ் ஸ்பெஷலிஸ்ட்

அதனாலேயே அவர் எப்போதும் சாக்லேட் பாயாகவே வலம் வருகிறார். தனது இரண்டாவது இன்னிங்சில் கூட ரொமான்ஸ் இமேஜை அவர் விடவில்லை. இறுதிச்சுற்றில் 'ஏய் சண்டக்காரா' பாடலும், விக்ரம் வேதாவில் 'யாஞ்சி யாஞ்சி' பாடலும் ஹிட் ஆகியது.

எப்போதும் சாக்லேட் பாய்

எப்போதும் சாக்லேட் பாய்

சமீபத்தில் கூட மாதவனுக்கு ஒரு இளம்பெண் புரபோஸ் செய்தார். ஆனால் அந்த புரபோசலை நாசுக்காக அவர் தவிர்த்துவிட்டார். மாதவனின் சாக்லேட் பாய் இமேஜ் இன்னும் மாறவில்லை என்பதற்கான இதுவே சான்று.

வயதான தோற்றம்

வயதான தோற்றம்

மாதவன் தற்போது தி ராக்கெட்டரி படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அவர் வயதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனால் அவர் சில காலம் வயதான தோற்றத்திலேயே காணப்பட்டார்.

சோ ஹாட்

இந்நிலையில் அவருடைய ரசிகை ஒருவர் மாதவனின் ஸ்டைலான போட்டோ ஒன்றை போட்டு, மாதவன் எப்போதுமே செம ஹாட் தான் என பதிவிட்டுள்ளார். மேலும், அவர் ஏன் இவ்வளவு ஹாட்டாக இருக்கிறார் என்பதை நினைக்கும் போது தனக்கு அழுகை வருவதாகவும் அந்த ரசிகை குறிப்பிட்டுள்ளார்.

நானும் அழுகிறேன்

அந்த போட்டோவை ரீடிவீட் செய்துள்ள மாதவன், அந்த புகைப்படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த புகைப்படத்தை பார்க்கும் போது தனக்கு அழுகை வருகிறது என்றும், சீக்கிரம் அந்த போட்டோவில் இருப்பது போல் மீண்டும் உடலை மாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X