மாதவனின் மாறா டிரைலர் ரிலீஸ்.. பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு.. தமிழிலும் ஹிட் அடிக்குமா?

சென்னை: நடிகர் மாதவன் நடிப்பில் உருவாகி உள்ள மாறா படத்தின் டிரைலர் இன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

மலையாளத்தில் துல்கர் சல்மான், பார்வதி மேனன் நடிப்பில் வெளியான சார்லி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் இந்த படம்.

வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 8ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது.

மாதவனின் மாறா

மாதவனின் மாறா

இயக்குநர் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஷிவாதா, மெளலி, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ளது மாறா திரைப்படம். வரும் ஜனவரி 8ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது. சைலன்ஸ் திரைப்படமும் அமேசான் பிரைமில் தான் வெளியானது குறிப்பிடத்தக்கது.

டிரைலர் எப்படி இருக்கு

டிரைலர் எப்படி இருக்கு

மாறா படத்தின் டிரைலர் இன்று வெளியாகி உள்ளது. மாதவனுக்கு ஜோடியாக ஏற்கனவே விக்ரம் வேதா படத்தில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் தான் இந்த படத்திலும் ஜோடி என்பதால், கெமிஸ்ட்ரி பக்காவாக ஒத்துப் போகிறது. தன்னுடைய கதையின் நாயகனான மாறாவை தேடி அவர் போகும் பயணத்தில் மாறாவை சந்தித்தாரா? இருவரும் சேர்ந்தார்களா? என்பது போல டிரைலர் அழகாக கட் செய்யப்பட்டு இருக்கிறது.

அழகு மாதவன்

அழகு மாதவன்

தாடி எல்லாம் நரைத்து விட்டது. இனிமேலும், ஹீரோயினுடன் எப்படி ரொமான்ஸ் பண்ணுவது என ஃபீல் பண்ணி பேட்டி கொடுத்த மாதவன், இந்த படத்தில் மீண்டும் செம அழகாக ரசிகைகளை கொள்ளைக் கொள்ளும் அதே மாதவனாக வலம் வருகிறார். ஒவ்வொரு காட்சிகளிலும் பாசிட்டிவ் எனர்ஜியை கொடுக்கிறார்.

அதே ஹிட்

அதே ஹிட்

வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அமேசான் பிரைமில் வெளியாகும் மாதவனின் மாறா திரைப்படத்திற்கு, மலையாளத்தில் துல்கர் நடிப்பில் வெளியான சார்லி படத்திற்கு கிடைத்ததை போலவே மிகப்பெரிய வெற்றி கிடைக்குமா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம். டிரைலரை பொறுத்தவரையில் ஒரு வெற்றிப் படைப்பாகவே இந்த படம் தெரிகிறது.

பொங்கல் போட்டி

பொங்கல் போட்டி

தியேட்டரில் பொங்கலை முன்னிட்டு நடிகர் விஜய்யின் மாஸ்டர், சிம்புவின் ஈஸ்வரன் வெளியாகிறது. ஒடிடி தளத்தில் மாதவனின் மாறா மற்றும் ஜெயம் ரவியின் பூமி உள்ளிட்ட படங்கள் ரிலீசாக உள்ளன. இந்நிலையில், வரும் பொங்கல் பண்டிகை போட்டி தியேட்டரிலும் ஒடிடியிலும் கடுமையாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X