ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஷிவதா இரண்டு ஹீரோயின்களுடன் கலக்கவுள்ள ’மாறா’ மாதவன்!

சென்னை: மாதவன் இயக்கி நடித்து வரும் ராக்கெட்டரி படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'சார்லி' படத்தின் ரீமேக்கில் மாதவன் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தில் மாதவனுக்கு ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் ஷிவதா என இரண்டு ஜோடிகள் நடித்து வருகிறார்களாம்.

விக்ரம் வேதா

விக்ரம் வேதா

புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான விக்ரம் வேதா இந்தியளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆஃபிஸிலும் வசூலை வாரிக் குவித்தது. இந்த படத்தில் நடித்த நடிகர் மாதவனுக்கும் விஜய்சேதுபதிக்கும் பாராட்டுக்கள் குவிந்தன.

நம்பி நாராயணன் பயோபிக்

நம்பி நாராயணன் பயோபிக்

விக்ரம் வேதா படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு இந்திய விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கி நடித்து வருகிறார் மாதவன். நம்பி நாராயணன் கெட்டப்பில் மாதவன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. விரைவில் ராக்கெட்டரி படம் திரை வானில் பறக்கவுள்ளது.

மீண்டும் அனுஷ்காவுடன்

மீண்டும் அனுஷ்காவுடன்

சுந்தர்.சி இயக்கத்தில் மாதவன், அனுஷ்கா 'இரண்டு' படத்தில் நடித்திருந்தனர். மறுபடியும் இந்த ஜோடி ‘நிசப்தம்' படத்தில் இணைந்துள்ளது. ஹேமந்த் மதுக்கூர் இயக்கத்தில் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள நிசப்தம் படத்தில் மாதவன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

மலையாள ரீமேக்

மலையாள ரீமேக்

2015ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சார்லி படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இயக்குநர் மார்ட்டின் பிரக்கத் இயக்கத்தில் துல்கர் சல்மான், பார்வதி, அபர்ணா கோப்நாத், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தின் ரீமேக்கில் தான் மாதவன் தற்போது நடித்து வருகிறார்.

மாறா

மாறா

மாறா எனும் பெயர் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பரீட்சையமானது. வெற்றி மாறன், சூரரைப் போற்று படத்தில் சூர்யா பெயர் மாறா என இந்த பெயருக்கும் கோலிவுட்டுக்கும் சூப்பர் கனெக்‌ஷன்கள் உள்ளன. மாறா எனும் டைட்டிலில் தான் மாதவனின் அடுத்த படம் உருவாகி வருகிறது.

Recommended Video

பிரச்சனையில் சிக்கிய விக்ரம் வேதா ஹீரோயின்- வீடியோ
விக்ரம் வேதா நாயகி

விக்ரம் வேதா நாயகி

விக்ரம் வேதா படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் தான் மாறா படத்திலும் ஜோடியாக நடித்து வருகிறார். மலையாளத்தில் பார்வதி பண்ண டெசா கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்து வருகிறாராம்.

நெடுஞ்சாலை நாயகி

நெடுஞ்சாலை நாயகி

நெடுஞ்சாலை, அதே கண்கள் உள்ளிட்ட படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஷிவதா மாதவனின் மாறா படத்தில் டாக்டர் ரோலில் நடித்து வருகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X