அழகிய மாதவன்... வைரலாகும் இளவயது போட்டோ

சென்னை: நடிகர் மாதவன் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட போட்டோ ஒன்றை தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு மேடியே இது 5000 வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டது என்று தலைப்பிட்டுள்ளார். அந்த போட்டோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திரையுலகின் ரகசிய சிநேகிதன் வேறு யாரும் இல்லை. நம்முடைய ஸ்வீட் மேடி தான் அது. அவருக்கு இருக்கும் ரசிகைகளின் எண்ணிக்கை எண்ணில் அடங்காதவை.

Actor Madhavan’s Old Photo viral on social media
தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அவர் மீது கிரேஸியாக இருக்கும் பெண்கள் பலர்.

வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் குறையவே இல்லை இந்த பஞ்ச் டயலாக் சூப்பர்ஸ்டாருக்கு மட்டும் சொந்தம் அல்ல, மேடிக்கும் அது பொருந்தும். அப்படிப்பட்ட சார்மிங் ஹீரோ மாதவன்.

அவர் பதிவிடும் புகைப்படங்கள் அனைத்தும் உடனடியாக ரசிகைகள் மத்தியில் வைரலாவது வழக்கம். அவரின் வயது கூடிக்கொண்டே போவதைப் போல், அவர் அழகும் மெருகேறிக்கொண்டே போகிறது எனலாம்.

அந்த வகையில் தனது இளம் வயது புகைப்படம் ஒன்றினை ட்விட்டரில் பதிவு செய்தார். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட அந்த புகைப்படம், மேடியின் யூத் லுக்கில் படு ஸ்மார்ட் மற்றும் ரொமான்டிக்காக உள்ளது. இந்த புகைப்படத்திற்கு மேடியே இது 5000 வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டது என்று தலைப்பிட்டுள்ளார்.

Actor Madhavan’s Old Photo viral on social media

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரின் ஒவ்வொரு பதிவையும் கொண்டாடும் ரசிகைகள் இந்த கியூட் புகைப்படத்தை மட்டும் விட்டு வைப்பார்களா என்ன.

மாதவன் தற்போது தி ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் எனும் திரைப்படத்தை தனது சொந்த தயாரிப்பில் எடுத்து வருகிறார். இது இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து உருவாக்கப்படுகிறது. இதில் நம்பி நாராயணின் கதாபாத்திரத்தில் மாதவன் நடித்து வருகிறார். கூடிய விரைவில் இது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Read more about: madhavan மாதவன்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X