தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் பதக்கங்களை குவித்த நடிகர் மாதவனின் மகன்.. குவியும் வாழ்த்து!

சென்னை: நடிகர் மாதவனின் மகன் தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் 7 பதக்கங்களை குவித்து சாதனை படைத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் மாதவன். கோலிவுட்டின் சாக்லேட் பாய் என்று அழைக்கப்படுகிறார்.

தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் மற்றும் இந்தி சினிமாவிலும் தனக்கான இடத்தை தக்க வைத்துள்ளார் நடிகர் மாதவன்.

வேதாந்த் என்ற மகன்

வேதாந்த் என்ற மகன்

நடிகர் மாதவன் தனது சரிதாவை கடந்த 1999ஆம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வேதாந்த் என்ற மகன் உள்ளார். 16 வயதான வேதாந்த் மாதவன் விளையாட்டுத்துறையில் ஆர்வமாக உள்ளார். நீச்சல் போட்டிகளில் கலக்கி வருகிறார்.

லத்வியன் நீச்சல் போட்டி

லத்வியன் நீச்சல் போட்டி

கடந்த மார்ச் மாதம் லத்வியன் ஓபன் நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டார் வேதாந்த். இதில் வெண்கலப் பதக்கத்தை வென்று பெருமை சேர்த்தார் வேதாந்த். இந்நிலையில் தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்ற வேதாந்த் 7 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.

7 பதக்கங்களை குவித்த மாதவன் மகன்

7 பதக்கங்களை குவித்த மாதவன் மகன்

சமீபத்தில் பெங்களூருவில் உள்ள பசவங்குடி நீச்சல் மைய்யத்தில் 47-வது ஜூனியர் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. இதில் மகாராஷ்டிரா சார்பில் வேதாந்த் மாதவன் பங்கேற்றார். பல்வேறு பிரிவுகளில் பங்கேற்ற அவர், 4 வெள்ளிப் பதக்கங்களையும், 3 வெண்கலப் பதக்கங்களையும் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

ராக்கெட்ரி படம்

ராக்கெட்ரி படம்

வேதாந்தின் சாதனைக்கு பலரும் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர். நாடு முழுவதும் ரசிகர்களை பெற்றுள்ள நடிகர் மாதவன், தற்போது ராக்கெட்ரி The Nambi Effect என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறை கூறும் இப்படத்தில் நம்பி நாராயணனின் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் மாதவன் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X