ஆசிய நீச்சல் போட்டி.... இறுதிச் சுற்றில் சாதித்த மாதவன் மகன் வேதாந்த்
Recommended Video
சென்னை: ஆசிய நீச்சல் கூட்டமைப்பு, இந்திய நீச்சல் சம்மேளனம் சார்பில் பெங்களூருவில் நீச்சல் போட்டி நடைபெற்றது. அதில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான நீச்சல் போட்டியில் நடிகர் மாதவனுடைய மகன் வேதாந்த் உள்ளிட்ட நால்வர் அணி பங்கேற்றது. அதில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகர் மாதவன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தனது அளவில்லா மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஏசியன் சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் இந்திய அணி வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளது. இந்த நால்வர் அணியில் ஒருவர் நமது நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் மாதவன்.

உத்கர்ஷ் பாட்டீல், சாஹில் லாஸ்கர், வேதாந்த் மாதவன், ஷோன் கங்குலி தான் நம் இந்தியாவிற்கு வெள்ளி பதக்கத்தை பெற்று தந்துள்ள அந்த நால்வர் அணி. இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்க பதக்கத்தை தாய்லாந்தும், வெண்கல பதக்கத்தை ஜப்பானும் வென்றுள்ளன.
மேலும் ஆண்களுக்கான 4x100 மீட்டர் ஆசியன் சாம்பியன்ஷிப் ஃப்ரீ ஸ்டைல் ரிலேவில் இந்திய அணி தங்க பதக்கத்தை வென்று இந்தியாவிற்கு பெருமையை தேடி தந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தருணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகர் மாதவன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தனது அளவில்லா மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
மாநில அளவில் வேதாந்த் பல நீச்சல் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றுள்ளார். தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் ஜூனியர் பிரிவில் பங்கேற்று இதுவரையில் 1 வெள்ளி பதக்கத்தையும், 3 தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளார். அவரின் ஒவ்வொரு வெற்றி தருணங்களையும் மாதவன் தனது சமூக வலைதளபக்கங்களில் பதிவிடுவது வழக்கம்.
அந்த வகையில் தனது மகனின் இந்த வெற்றியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தியாவின் சார்பாக வேதாந்த் மாதவன் பெற்ற முதல் அதிகாரபூர்வமான வெள்ளிப்பதக்கம் என்று தனது வாழ்த்தினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவிற்கு திரையுலத்தினர் பலர் தங்களது வாழ்த்தினை தெரிவித்து வருகிறார்கள். மகனின் வெற்றியை நினைத்து பெருமிதத்தில் மிதந்து கொண்டிருக்கிறார் தந்தை மாதவன். அவரது மகன் மேலும் மேலும் பல சாதனைகளையும் வெற்றியும் பெற வாழ்த்துக்கள்.
மாதவன் தனது ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் எனும் விண்வெளி ஆராய்ச்சி குறித்த படம் ஒன்றினை வெளியிடும் தருவாயில் உள்ளார். இப்படம் முன்னாள் இஸ்ரோவின் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்படும் படம். கூடிய விரைவில் இது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











