போங்கடா கிறுக்கு கதாநாயன்களா.. பிரபல நடிகர்களை திட்டிய மாதவன் .. வைரலாகும் வீடியோ !

மும்பை : பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான் மற்றும் சைப் அலி கானை வெளுத்து வாங்கும் வீடியோ ஒன்று பிரபலமாக பேசப்பட்டும், பகிரப்பட்டும் வருகிறது.

வாரிசு நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் ,மற்றவர்களை ஓதுக்கித்தள்ளுகிறார்கள் என்ற பல கருத்துக்கள் சினிமாத்துறையில் சமீபத்தில் வளம் வந்து கொண்டு இருக்கின்றது.

பெரிய நடிகர்கள் பலரும் ஒன்று சேர்ந்து வளர்ந்து வரும் நடிகர்களை கேலி செய்வதும் , அவர்களின் வளர்ச்சியை கண்டு பொறாமை பட்டு அவர்களின் வளர்ச்சியை தடுப்பதாகவும் ஒரு கருத்துக்கள் வந்த வண்ணம் உள்ளது.

தானே வளர்ந்து

தானே வளர்ந்து

சமீபத்தில் சுஷாந்த் சிங்க் தற்கொலை செய்து கொண்டது பாலிவுட் மட்டும் அல்லாமல் ஒட்டு மொத்த சினிமா துறையினரையும் கதிகலங்க செய்தது. வளர்ந்து வரும் நடிகர்களுக்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்றும் , சுஷாந்த்தை ஒதுக்கி வைத்ததுதான் அவரது மரணத்திற்கு காரணம் என்றும் பலதரப்பில் கூறப்பட்டு வருகின்றது . அதனால் வாரிசு நடிகர்களுக்கு எதிராக எதிர்ப்புகள் வலுக்த்துக்கொண்டே இருக்கின்றது .

பல கஷ்டம்

பல கஷ்டம்

சுஷாந்த் சிங்கை போன்று தமிழில் தற்போது இருக்கும் கதாநாயகர்களில் நடிகர் சிவகார்த்திகேயன் தான் அனைவருக்கும் நினைவுக்கு வருகின்றார். பல நடிகர்கள் கஷ்டப்பட்டு சினிமாவில் ஜெயித்தாலும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி அனைவரின் கவனத்தையும், மனதையும் ஈர்த்துள்ளது. சுஷாந்த் சிங்கின் மரணம் அனைவரையும் வெகுவாக பாதித்த நிலையில் , நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவுகள் பெருகி வருகின்றன.

உதாசினம்

உதாசினம்

பல மேடை நிகழ்ச்சிகளில் பிரபல நடிகர்கள் சுஷாந்த்தை உதாசீனம் படுத்தியதாகவும் , அவரை ஓதுக்கியதாகவும் பலரும் குற்றச்சாட்டு வைக்கின்றனர் . இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான சுஷாந்த் மனஅழுத்தத்திற்கு சிகிச்சை பெற்றதாகவும் கூறப்படுகின்றது . சுஷாந்திற்கு ஆதரவாக பேசும் சில பிரபலங்களுக்கு பல தரப்பில் ஆதரவுகள் கிடைத்து வருகின்றது.

தமிழ் கற்றல்

தமிழ் கற்றல்

வேறு ஒரு மேடை நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் ஒன்று தற்போது வைரலாக பரவி வருகின்றது. ஷாருக் கான் மற்றும் சைப் அலி கான் மேடையில் நின்று நாங்கள் தமிழ் கற்க போகிறோம் என்று கூறி ஹிந்தி வசனங்களை கூறுகிறார்கள் , அதனை தமிழில் மாதவனை மொழிபெயர்க்க கூறுகின்றனர். மாதவன் தமிழில் கூறியதும் , அதனை திரும்ப சொல்ல முடியாமல் திணறுகின்றனர் இரண்டு கான்களும்.

இன்சல்ட்

இன்சல்ட்

பிறகு தங்களை இன்சல்ட் செய்யும் மாதிரியான வசனத்தை கூறுங்கள் என்று அவர்கள் இருவரும் மாதவனிடம் கேட்க , அதற்கு மாதவன் "போங்கடா கிறுக்கு கதாநாயன்களா " என்று கூறுகிறார் . விழாவில் கலந்து கொண்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இதனை கேட்டவுடன் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர் . இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகின்றனது . இதனை பார்த்த பலரும் கேட்டு வாங்கிக்கட்டிக்கொண்டனர் என்று கூறி வருகின்றனர்.

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

சுஷாந்தின் மரணத்திற்கு பிறகு பல மேடை நிகழ்ச்சிகள் வைரலாக பரவி வரும் நிலையில் இந்த வீடியோவும் வெகுவாக பரவி வருகின்றது . ஷாருக் மற்றும் சைப் அலி கானை ஷட் அப் என்று நீல் நிதின் முகேஷ் கூறும் வீடியோ ஒன்றும் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது. இவ்வாறு மேடை நிகழ்ச்சிகள் அனைத்தும் தற்போது வைரலாக பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்ஸ். மேடையில் அவ்வாறு பேசிக்கொண்டாலும் மாதவனும் , ஷாருக்கும் நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே, அதிலும் ஷாருக்கின் அடுத்த படத்தில் மாதவன் கெஸ்ட் ரோல் செய்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பல தரப்பில் ஷாருக் கானுக்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X