மின்னலே பட ரீமேக் காட்சிகளை வெளியிட்ட மாதவன்!

சென்னை : தமிழ் சினிமாவில் பல அழகான நடிகர்கள் உள்ளனர்.ஆனால் பல ஆண்டுகள் தாண்டி இன்றும் மேடி (maddy)என்று அழைக்கப்படும் மாதவன் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இருந்து இன்று வரை பல பெண்களால் ரசிக்கப்படுகின்றவர் .

அலைபாயுதே,ரன் என பல காதல் வெற்றி படங்களை கொடுத்து இன்றுவரை அதை நம் நினைவில் நிலைக்க வைத்தவர்.தமிழ் மட்டுமின்றி பாலிவுட் திரைபடங்களிலும் நடித்து பிரபலமானார் .இன்றும் தனது சிரிப்பால் பல பெண்களை கவர்ந்தார் .

இந்நிலையில் தற்போது லாக் டவுன் என்பதால் பிரபலங்கள் அனைவரும் தங்கள் வீட்டில் இருந்தபடியே பல போட்டோக்கள் வீடியோக்கள் என சமூக வலையதளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.

மின்னலே

மின்னலே

அந்த வகையில் தற்போது மாதவன் அவர்கள் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அது மின்னலே திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் காட்சிகள் ஆகும்.மின்னலே தமிழ் சினிமாவில் மறக்க முடியாத படங்களில் ஒன்று.இந்த ஒரு படத்திலேயே பல ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார் மேடி .

சூப்பர்,டூப்பர் ஹிட்

சூப்பர்,டூப்பர் ஹிட்

மாதவன்,அப்பாஸ்,ரீமா சென் என பலரும் நடித்த இந்த படம் இயக்குனர் கவுதம் மேனனின் முதல் படமாகும். தமிழ் சினிமாவில் வழக்கத்துக்கு மாறான வசனங்களும்,காட்சிகளும் அமைந்த படம் என்றே சொல்லலாம்.அந்த படம்தான் இசையமைப்பாளர் ஹாரிஸின் முதல் படமாகும் . அழகான கல்லூரி வாழ்க்கை என ஆரம்பித்து ஒரு காதல் கதையாக முடியும் வித்தியாசமான திரைக்கதை கொண்டது.

மனதில் ஹம்மிங்

மனதில் ஹம்மிங்

மின்னலே படத்தில் வரும் பாடல்கள் இன்று வரை பலரின் கைபேசியில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.பலரின் விருப்பமான படங்களில் இதுவும் ஒன்றாக அமைந்தது.கவுதம் மேனனுக்கு மேலும் பல பட வாய்ப்புகளை தேடி தந்தது. குறிப்பாக பம்பாய் ஜெய்ஸ்ரீ பாடிய வசீகர யாராலும் மறக்க முடியாது .

முதல் வெற்றி

முதல் வெற்றி

மின்னலே படம் வெளியான அதே ஆண்டு ஹிந்தியில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது.அதிலும் மாதவன் கதாநாயகனாக நடித்தார்.ஆனால் ரீமாசன் கதாபாத்திரத்திற்கு பதிலாக தியா மிர்சா நடித்தார்.ஹிந்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது இந்த படம்.ஹிந்தி ரசிகர்களிடையே மின்னலாகவே பாய்ந்தது இந்த படம் என்று சொன்னால் அது மிகையாகாது .

Recommended Video

Actors Beard Looks | Sarath Kumar, Vijay Devarkonda, Jr. NTR, Madhavan
மனசுக்குள் ரீ வைண்ட்

மனசுக்குள் ரீ வைண்ட்

தற்போது மாதவன் அவர்கள் இந்த படத்தின் சில காட்சிகளை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . "இந்த படத்தின் நினைவுகளை கேப்ஷனாக போட்டு பகிர்ந்துள்ளார்.அந்த படத்தில் ஹீரோயினாக நடித்த தியா மிஸ்ரா அவர்களும் இந்த பதிவிற்கு கமெண்ட் செய்துள்ளார் என்பது ஆச்சரியமான ஒன்று .மாதவன் மனசுக்குள் மின்னலே நினைவை ரீ வைண்ட் செய்கிறார் .அதனை பார்த்த ரசிகர்கள் வைரலாக பரவிவருகின்றனர் .
உழைத்த உழைப்பு , வலி , எல்லாவற்றுக்கும் கிடைத்த பரிசு என்றும் தன ரசிகர்களுக்கு நன்றி சொல்லி உள்ளார் மாதவன். பல சவால்களையும் , கஷ்டங்களையும் கடந்து கிடைத்த வெற்றி என்று பெருமிதம் கொண்டு உள்ளார். இந்த நாள் ஒரு சிறப்பான நாளாக மாறியது என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X