பெண்கள் கட்டாயம் பாருங்க.. கையெடுத்து கும்பிட்ட மாதவன்..எல்லாம் உங்க பாதுகாப்புக்காகத்தான் - வீடியோ!
சென்னை: நாடு முழுவதும் நாள்தோறும் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வரும் விஷயம் என்றால் அது, கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதுதான். தொடக்கத்தில் இந்த கொலை, தற்கொலை என சொல்லப்பட்ட நிலையில், சக மருத்துவ மாணவர்களின் போராட்டத்தின் அடிப்படையில் காவல்துறை மற்றும் மருத்துவமனை நிர்வாகம் கொலை என அறிவித்தது. இந்நிலையில் நடிகர் மாதவன் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
இவ்வாறாக முன்னுக்குப் பின் முரணாக ஆரம்பத்தில் இருந்தே இந்த பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் தகவல்கள் காவல்துறை தரப்பில் இருந்தும் மருத்துவக் கல்லூரி தரப்பில் இருந்தும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்த வழக்கில் மேற்கு வங்க காவல்துறையின் விசாரணை திருப்தியாக இல்லை எனக் கூறி, கொல்கத்தா உயர் நீதிமன்றம், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. மேலும் நாளை அதாவது ஆகஸ்ட் 22ஆம் தேதி சிபிஐ தனது விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் முதுநிலை மருத்துவப் படிப்பினை பயின்று வந்த பயிற்சி மருத்துவ மாணவி கடந்த 9ஆம் தேதி காலையில் மருத்துவமனையில் உள்ள கருத்தரங்க கூடத்தில் சடலமாக மீட்கப்பட்டார். இப்படியான நிலையில், மருத்துவர்கள் தரப்பில் இருந்து நீதிமன்றத்திற்கு சமர்பிக்கப்பட்டுள்ள பிரேத பரிசோதனையில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும், அந்தரங்க உறுப்பில் இருந்து ரத்தம் அதிகப்படியாக வெளியேறியுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவியின் கண்களில் இருந்தும் ரத்தம் வெளியேறியுள்ளது. மாணவியின் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது என பிரேத பரிசோதனை ரிப்போர்ட் அனைவரையும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
150 கிராம் விந்தணு: இதுமட்டும் இல்லாமல், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள மாணவியின் உடலில் இருந்து சுமார் 150 கிராம் விந்தணு சேகரிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் பலரையும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. இன்னும் சொல்லப்போனால், இது கூட்டுப் பாலியல் வன்கொடுமைக் கொலையாக இருக்க அதிக வாய்ப்புள்ளது என கூறிவருகின்றனர். இந்த பாலியல் வன்கொடுமை படுகொலைக்கு நீதி கேட்டு போராடுபவர்கள் இந்த வழக்கில் நீதி நிலைநாட்டப்படவேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் ஆகஸ்ட் 14ஆம் தேதி இரவு போராட்டக்கார்கள் மீது அடையாளம் தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

உச்ச நீதிமன்றம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் அடங்கிய மூன்று பேர் கொண்ட பென்ச் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். மேலும் மேற்கு வங்க அரசின் செயல்பாடுக்கு உச்ச நீதிமனறம் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை இவ்வாறு நடைபெற்று வரும் வேலையில் பலரும் மாணவி கொல்லப்பட்டதற்கும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கும் தங்களது அதிர்ச்சியை வெளிப்படுத்தி வந்தனர். இந்நிலையில் நடிகர் மாதவன் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மாதவன்: அதாவது அந்த வீடியோவானது தெலுங்கானா அரசு பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக செயல்படுத்திவரும் திட்டம் குறித்து வெளியிடப்பட்ட வீடியோ. ஏற்கனவே தமிழ்நாட்டில் இரவில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, காவலன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதாவது காவலன் என்ற செயலியை ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் பெண்கள் தங்களது பாதுகாப்பிற்காக காவல்துறை உதவியை நாடலாம். அதேபோல் தமிழ்நாடு டி.ஜி.பி.,ஆக சைலேந்திர பாபு இருந்தபோது மற்றொரு திட்டம் செயல்படுத்தப்பட்டது.
பெண்கள் பாதுகாப்பு: அந்தத் திட்டத்தின்படி, ஆன்ராய்டு போன் இல்லாத பெண்களின் பாதுகாப்பை இரவு நேரங்களில் உறுதி செய்யும் பொருட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது , 1091, 112, 044-23452365, 044-28447701 ஆகிய எண்களுக்கு அழைத்து பெண்கள் தங்களது பாதுகாப்பினை உறுதி செய்து கொள்ள முடியும் எனக் கூறினார். அதாவது, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பெண்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்ல பாதுகாப்பு இல்லை என்பதை உணர்ந்தால் மேற்குறிப்பிட்டுள்ள எண்ணுக்கு போன் செய்யலாம். அவ்வாறு செய்தால், காவல்துறையினர் நேரடியாக நீங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து நீங்கள் செல்லவேண்டிய இடத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்வார்கள் எனக் குறிப்பிடப்பட்டது. மேலும் இந்த சேவைக்கு கட்டணமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











