twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அது பொய், நம்பாதீங்க, நான் ஒத்துக்கல: மாதவன் அதிர்ச்சி

    பொய்யான பிரச்சாரத்தால் மாதவன் அதிர்ச்சியடைந்தார்

    |

    சென்னை: நடிகர் மாதவன் கல்லூரி விளம்பரத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என தெரிவித்துள்ளார்.

    மேடி என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகர் மாதவன், கோவையில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் தான் பங்கேற்பதாக வந்த விளம்பரம் பொய்யானது என ட்வீட் செய்துள்ளார்.

    Actor Madhavan shocked

    கோவையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் அக்டோபர் 27ஆம் தேதி ஸ்பார்க் என்ற நிகழ்ச்சி நடைபெறுவதாகவும், அந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக மாதவன் கலந்துகொள்கிறார் எனவும் போஸ்டர் அடிக்கப்பட்டுள்ளது.

    மேலும், அந்த நிகழ்வில் சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் செந்தில் மற்றும் அவருடைய மனைவி ராஜலட்சுமியும் கலந்துகொள்வதாக போஸ்டர் அடிக்கப்பட்டுள்ளது.

    அந்த போஸ்டரை ட்விட்டரில் பதிவிட்டு, இந்த நிகழ்வில் நீங்கள் கலந்துகொள்கிறீர்களா? என ரசிகர் ஒருவர் மாதவனிடம் கேட்டிருந்தார்.

    இது பொய்ப்பிரச்சாரம். இந்த மாதிரி எந்த நிகழ்ச்சிக்கும் வருவதாக நான் ஒப்புக் கொள்ளவில்லை. தவறாக விளம்பரம் செய்துள்ளனர் என ட்வீட் செய்துள்ளார்.

    பிறகு அது கல்லூரி மாணவர்கள் ஒரு ஜாலிக்காக டிசைன் செய்தது என தெரியவந்துள்ளது.

    English summary
    Actor Madhavan shocked by a fake event poster which was designed by college students.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X