ப்ளீஸ்.. என் குழந்தைகளின் நலன் கருதி எதையும் சொல்லாதீர்கள்.. உருகிய நடிகை.. மாதவன் பதிலை பாருங்க!

சென்னை: உண்மை தெரியாமல் எந்த கருத்தையும் வெளியிடாதீர்கள் என்று கூறிய நடிகை ஷில்பா ஷெட்டிக்கு நடிகர் மாதவன் ஆறுதல் கூறியுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் கடந்த 2019ஆம் ஆண்டு தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவை திருமணம் செய்தார்.

இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி தொழில் அதிபர் ராஜ் குந்த்ரா மும்பை போலீசாரால் திடீரென கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட ராஜ் குந்த்ரா

கைது செய்யப்பட்ட ராஜ் குந்த்ரா

ஆபாச படங்களை தயாரித்து வெளியிட்ட வழக்கில் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த பிப்ரவரி மாதமே அவருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்ட நிலையில் போதிய ஆதாரத்திற்காக காத்திருந்தது மும்பை போலீஸ். இந்நிலையில் ஆதாரங்களுடன் கடந்த 19 ஆம் தேதி இரவு ராஜ் குந்த்ராவை போலீசார் கைது செய்தனர்.

ராஜ் குந்த்ரா மீது புகார்

ராஜ் குந்த்ரா மீது புகார்

ஆபாச படம் தயாரித்து வெளியிட்ட ராஜ் குந்த்ரா, அதற்கான ஆடிஷனில் பங்கேற்ற சில நடிகைகளை ஆடையின்றி நிர்வாணமாக நடிக்க கூறியதாக புகார் எழுந்தது. மொத்தம் 9 நடிகைகள் ராஜ் குந்த்ரா மீது இதுபோன்ற புகார்களை அளித்தனர்.

வாட்ஸ் அப் உரையாடல்

வாட்ஸ் அப் உரையாடல்

இதனை தொடர்ந்து ராஜ் குந்த்ரா தனது பார்ட்னர்களுடன் ஆபாச படம் தொடர்பாக பேசிய வாட்ஸ் அப் உரையாடல்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரது அலுவலகத்திலும் போலீசார் அதிரடி ஆய்வு நடத்தினர். இதில் பல ஆபாச பட சிடிக்கள் கைப்பற்றப்பட்டன.

ஒரு நாளைக்கு ரூ. 8 லட்சம்

ஒரு நாளைக்கு ரூ. 8 லட்சம்

மேலும் ஆபாச படங்கள் மூலம் ராஜ் குந்த்ரா நாள் ஒன்றுக்கு 8 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்ததாகவும் தகவல் வெளியானது. அதோடு ராஜ் குந்த்ராவை அவரது வீட்டிற்கு அழைத்து சென்ற போலீசார் வீட்டிலேயும் விசாரணை நடத்தினர்.

கதறி அழுத ஷில்பா ஷெட்டி

கதறி அழுத ஷில்பா ஷெட்டி

அப்போது ஷில்பா ஷெட்டி குடும்ப மானமே போய்விட்டது என கணவர் ராஜ் குந்த்ராவிடம் கதறி அழுதார். மேலும் என்ன குறைச்சல் என இப்படி ஒரு தொழிலை செய்ய வேண்டும் என்றும் தனது கணவரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார் ஷில்பா ஷெட்டி.

சமாதானப்படுத்திய போலீஸ்

சமாதானப்படுத்திய போலீஸ்

அப்போது ரெய்டுக்கு சென்ற மும்பை குற்றப்பிரிவு காவல்துறையினர்தான் தலையிட்டு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தி வைத்ததாக தகவல் வெளியானது.

கை நழுவிய புராஜெக்ட்டுகள்

கை நழுவிய புராஜெக்ட்டுகள்

ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டதால் அவர்களின் பிஸ்னஸ் பெரும் சரிவை சந்தித்துள்ளது. ஷில்பா ஷெட்டியின் பல புராஜெக்ட்டுகளும் கை விட்டு போய்விட்டது. தான் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் இருந்தும் விலகியுள்ளார் ஷில்பா ஷெட்டி.

பல வதந்திகள் குற்றச்சாட்டுகள்

பல வதந்திகள் குற்றச்சாட்டுகள்

இந்நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் உருக்கமான ஒரு பதிவை ஷேர் செய்துள்ளார். அதாவது, கடந்த சில நாட்கள் ரொம்பவே சவாலாக உள்ளது. எங்களை சுற்றி பல வதந்திகளும் குற்றச்சாட்டுகளும் வலம் வருகின்றன. என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் பல்வேறு கேள்விகள் கேட்கப்படுகின்றன.

என் கொள்கை இதுதான்

என் கொள்கை இதுதான்

இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் தற்போது இதுகுறித்து பேசுவது தவறு. எனவே என்னைப் பற்றியும் என் குடும்பத்தை பற்றியும் அவதூறு பரப்புவதை நிறுத்துங்கள். எப்போதும் குற்றச்சாட்டுக்களை கூறாதே, விளக்கமளிக்காதே என்பதே என் கொள்கை.

என் குழந்தைகளின் நலன் கருதி

என் குழந்தைகளின் நலன் கருதி

எனக்கு நம் காவல் துறையினர் மீதும் நீதித்துறையினர் மீதும் என மிகுந்த நம்பிக்கை உள்ளது. நான் கேட்பதெல்லாம் ஒன்றுதான் ஒரு அம்மாவாக என் குழந்தைகளின் நலன் கருதி உண்மை தெரியாமல் தயவு செய்து எந்த கருத்தையும் முன் கூறாதீர்கள். மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் செயல்படுவேன் என பதிவிட்டுள்ளார்.

நடிகர் மாதவன் பதில்

நடிகர் மாதவன் பதில்

ஷில்பா ஷெட்டியின் இந்த பதிவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் மாதவனும் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு ஆறுதல் கூறியுள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது, எனக்கு தெரிந்த மன உறுதி கொண்ட நபர்களில் நீங்களும் ஒருவர். இந்த பிரச்சனையில் இருந்து நீங்கள் மீண்டு வருவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. உங்கள் குடும்பத்திற்காக நான் பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X