இந்தி எதிர்ப்பு: தமிழில் ட்வீட் போட்ட மாதவன்.. கமல் மாதிரியே பேசுறீங்களே ஒண்ணுமே புரியல!

தமிழில் தப்புத்தப்பாக ட்வீட் போட்டு ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளானார் நடிகர் மாதவன்.

Recommended Video

Actor Madhavan: தமிழில் ட்வீட் போட்டு சர்ச்சையில் சிக்கிய மாதவன்- வீடியோ

சென்னை: இந்தி எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், நடிகர் மாதவன் தமிழில் போட்ட டிவீட் ஒன்றை ரசிகர்கள் சகட்டுமேனிக்கு கலாய்த்து வருகின்றனர்.

தமிழில் சாக்லேட் பாயாக அறிமுகமாகி, தனக்கென இன்றளவும் ஒரு ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் மாதவன். அவர் தற்போது ராக்கெட்ரி தி நம்பி எபெக்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக வயதானவர் போல் தன் தோற்றத்தை அவர் மாற்றியுள்ளார்.

இந்நிலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக சமீபத்தில் தனது டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார் மாதவன். ஆங்கிலத்தில் போடப்பட்டிருந்த அந்தப் பதிவில், மக்கள் அனைவரும் காலி இடங்களில் வேப்ப மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

மேலும், அம்மரங்கள் நன்கு வளர்ந்தவுடன் ரூ. 5 ஆயிரம் வரை தமிழ்நாட்டில் விலை போகிறது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

தமிழில் டிவீட்:

பிறகு அதே டிவீட்டை தமிழிலும் அவர் வெளியிட்டிருந்தார். ஆனால், ஆங்கிலப் பதிவில் இருந்த தெளிவு அதில் இல்லை. கூகுள் டிரான்ஸ்லேட்டரைப் பயன்படுத்தி, தனது பதிவை அவர் மொழி பெயர்த்திருந்தது போல் இருந்தது அந்தப் பதிவு.

ரசிகர்கள் கிண்டல்:

ஏற்கனவே இந்தி எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், மாதவன் தமிழை இப்படி குதறி டிவீட் வெளியிட்டிருப்பதை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். ஒரு ரசிகர் இது கூகுள் டிரான்ஸ்லேட் தானே என வெளிப்படையாகவே கேட்டுள்ளார்.

குழப்பம்:

மற்றொருவரோ இதில் ஏதோ உள்குத்து இருப்பது போல் இருக்கிறதே எனப் பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர், ‘நீங்களும் கமல் மாதிரியே பேசுறீங்களே.. ஒண்ணுமே புரியல' எனப் பரிதாபமாகக் கேட்டுள்ளார்.

பாராட்டு:

பாராட்டு:

கிண்டல்கள் ஒருபுறம் இருந்தாலும், ‘இது உபயோகமான பதிவு. நன்றி' எனப் பல ரசிகர்கள் மாதவனைப் பாராட்டி வருகின்றனர். என்ன, இந்த டிவீட்டை நன்கு தமிழ் தெரிந்த யாரிடமாவது கேட்டு, சரியானபடி கொடுத்திருந்தால் தேவையில்லாமல் இப்படி கிண்டலுக்கு ஆளாகி இருக்க மாட்டார் மாதவன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X