Suriya 43 - சூர்யா 43.. அடுத்தடுத்து வெளியாகும் அசர வைக்கும் தகவல்கள்.. இவரும் நடிக்கிறாரா?
சென்னை: Suriya 43 (சூர்யா 43) சூர்யா 43 குறித்து அடுத்தடுத்து தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டே இருக்கின்றன.
சூர்யாவின் நடிப்பில் கடைசியாக எதற்கும் துணிந்தவன் படம் ரிலீஸானது. அந்தப் படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. பாண்டிராஜ் இயக்கியிருந்தார். இந்தச் சூழலில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் சூர்யா. ஸ்டூடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா படத்தை தயாரித்திருக்கிறார்.எதற்கும் துணிந்தவன் கலவையான விமர்சனத்தை பெற்றதால் இந்தப் படம் மீது பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

பத்து மொழிகளில்: இந்தப் படமானது 100 கோடி ரூபாய்க்கும் மேலான பட்ஜெட்டில் தயாராகிறது. அதுமட்டுமின்றி மொத்தம் பத்து மொழிகளில் 3டியில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது. இதுவரை சூர்யா நடித்த படங்களிலேயே இந்தப் படம்தான் அதிக பட்ஜெட் என்பது; இதுதான் பத்து மொழிகளில் வெளியாகும், முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
நம்பிக்கையை காப்பாற்றுவாரா சிவா?: அதேசமயம் சிவா கடைசியாக இயக்கிய அண்ணாத்த படம் படுதோல்வியடைந்தது. அதுமட்டுமின்றி சிவா கிராமத்து பாணியிலான கதைகளை இயக்குபவர். ஆனால் கங்குவா படமோ பீரியட் படமாக உருவாகிறது. எனவே கங்குவா படத்தை சிறப்பாக கொடுத்து தன்னை அவர் நிரூபிப்பாரா என்ற கேள்வியை சூர்யாவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேட்டனர்.
பட்டையை கிளப்பிய க்ளிம்ப்ஸ்: சில மாதங்களுக்கு முன்பு சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கங்குவா படத்தின் க்ளிம்ப்ஸ் வெளியிடப்பட்டது. க்ளிம்ப்ஸை பார்த்த ரசிகர்கள் தங்களது சந்தேகத்தை சிவா அடித்து நொறுக்கிவிட்டார். அவ்வளவு அட்டகாசமாக இருக்கிறது என மகிழ்ச்சியை வெளிப்படுத்திவருகின்றனர்.
சூர்யா 43: இந்நிலையில் சூர்யா அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் மெகா ஹிட்டாகி தேசிய விருதுகளை அள்ளியது. எனவே இந்தப் படத்தின் மீதும் அபரிமிதமான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது. மேலும் இது எழுத்தாளர் நரன் எழுதிய கதையை தழுவி எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
யார் யார் படத்தில்: தற்போது அந்தப் படம் பற்றிய புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இதில் மாதவனை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மாதவன் கொஞ்சம் தயக்க காட்டுவதாகவும்; அதேசமயம் சூர்யாவும், சுதாவும் அவருக்கு நெருக்கமான நண்பர்கள் என்பதால் கண்டிப்பாக நடிப்பார் என்றும் ஒரு தகவல் வெளியாகிறது. இதற்கிடையே இந்தப் படத்தில் துல்கர் சல்மானும் நடிக்கிறார் என கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











