முன்னாள் காதலியை பாலியல் ரீதியாக அடித்து துன்புறுத்தி.. அசிங்கமாய் பேசிய இளம் நடிகர்.. பாய்ந்தது வழக்கு!

மும்பை: முன்னாள் காதலியை பாலியல் ரீதியாக அடித்து துன்புறுத்திய ஸ்லம்டாக் மில்லியனர் பட நடிகர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பிரபல பாலிவுட் நடிகர் மதுர் மிட்டல். 29 வயதான மதுர் மிட்டல் சிறுவயது முதலே பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

ஏராளமான சீரியல்களிலும் நடித்துள்ளார். காஹின் பியார் நா ஹோ ஜாயே என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார்.

பெரும் சர்ச்சையில்

பெரும் சர்ச்சையில்

தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள மதுர் மிட்டல் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் மூலம் உலகம் முழுக்க பிரபலமானார். இந்நிலையில் தற்போது ஒரு பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகர் மதுர் மிட்டல்.

பாலியல் துன்புறுத்தல்

பாலியல் துன்புறுத்தல்

அதாவது, மதுர் மிட்டல் தனது முன்னாள் காதலியின் வீட்டிற்கு சென்று அவரை பாலியல் ரீதியாக அடித்து துன்புறுத்தியுள்ளார். கடந்த 13ஆம் தேதி இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மதுரின் முன்னாள் காதலி அவரை சந்தித்துள்ளார்.

சரமாரியாக தாக்கி

சரமாரியாக தாக்கி

அடுத்த 2 வாரங்களுக்குள் மது போதையில் இருந்த மதுர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் கூறியுள்ளார். இதனால் அவருடனான உறவை முறித்துள்ளார் அந்த இளம் பெண். இதனால் கோபமடைந்த மதுர், அந்தப் பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார்.

கன்னத்தில் அரைந்து

கன்னத்தில் அரைந்து

அந்தப் பெண்ணை அடித்து கீழே தள்ளியதோடு அவரது கழுத்தை 15 முறைக்கு மேல் நெரித்ததாகவும் அவரை கன்னத்தில் அரைந்து, முடியை பிடித்து இழுத்து, காதுகளை பிடித்து பிய்த்து வலது கண்ணின் கீழ் குத்தியுள்ளார். மேலும் அவரை தூக்கி கீழே போட்டும் தாக்கியுள்ளார்.

மார்பில் காயங்கள்

மார்பில் காயங்கள்

மேலும் இது ஒரு பாலியல் தாக்குதல் என்றும் இதனால் அந்த பெண்ணின் முகம், கழுத்து, மார்பு, விலா எலும்புகள், கைகள், முதுகு, காதுகள் மற்றும் கண்கள் முழுவதும் காயம்பட்டுள்ளதாகவும் வக்கீல் கூறியுள்ளார்.
இந்த விஷயத்தில் மாதுர் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.

பாலியல் குற்றம்

பாலியல் குற்றம்

இந்த தாக்குதல் தொடர்பாக பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை ஆகிய இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் மதுர் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மதுர் கடைசியாக ரவீனா டாண்டன் நடித்த 'மாட்ர்' படத்தில் நடித்தார். படம் 2017 இல் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X