யப்பா எத்தனை பேர் - லியோவில் இணைந்தார் வில்லன் நடிகர்.. வெளியானது புதிய அப்டேட்
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தில் நடிகர் மதுசூதனன் ராவ் நடிக்கவிருக்கிறார்.
வாரிசு படத்தின் கலவையான விமர்சனத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜுடன் இணைந்திருக்கிறார் விஜய். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு இந்தக் கூட்டணி இணைந்திருக்கிறது. மாஸ்டர் படத்தில் எப்படி அதுவரை பார்க்காத விஜய்யை பார்த்தோமோ அதேபோல் லோகேஷுடன் இணைந்திருக்கும் இந்தப் படத்திலும் பார்க்கலாம் என்ற நம்பிக்கையில் விஜய் ரசிகர்கள் இருக்கின்றனர்.

லியோ ப்ளடி ஸ்வீட் ப்ரோமோ
படத்துக்கு லியோ என பெயரிடப்பட்டுள்ளது. பல பெயர்கள் யூகிக்கப்பட்ட சூழலில் லியோ ப்ளடி ஸ்வீட் என்று பெயர் அறிவிக்கப்பட்ட உடனேயே இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதனை அதிகப்படுத்தும் விதமாக லியோ படத்தின் ப்ரோமோ வெளியாகியும் பட்டையை கிளப்பியது. ப்ரோமோவில் விஜய் ஒரு சாக்லேட் ஃபேக்டரி வைத்திருப்பது போலவும், அவரைத் தேடி மிகப்பெரிய கேங் ஒன்று வருவது போலவும் காட்சிகள் இருந்தன.

எல்சியூவில் லியோ
விக்ரம் படத்தில் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸை லோகேஷ் கனகராஜ் உருவாக்கியிருந்தார். அதில் கைதி பத்தில் இடம்பெற்றிருந்த கதாபாத்திரங்களை இணைத்து ஒரு மேஜிக் செய்திருந்தது போல் லியோ படத்திலும் அவ்வாறு செய்வார் என கருதப்படுகிறது. மேலும், இயக்குநர் ரத்னகுமார் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி பயன்படுத்திய கண்ணாடியுடன் வெளியிட்டிருந்த புகைப்படம் அதை உறுதிப்படுத்தும் விதமாகவே இருந்தது. இருப்பினும், விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை எப்படி சர்ப்ரைஸாக ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தினாரோ அதுபோல் லியோவிலும் பல சர்ப்ரைஸ்கள் இருக்கலாம் என தெரிகிறது.

காஷ்மீரில் விறுவிறுப்பாக ஷூட்டிங்
லியோ படத்தின் ஷூட்டிங் தற்போது காஷ்மீரில் நடந்துவருகிறது. இதற்காக படக்குழு சில வாரங்களுக்கு முன்னதாக தனி விமானம் மூலம் காஷ்மீர் சென்றது. அங்கு நடந்த ஷூட்டிங்கில் விஜய், த்ரிஷா, மிஷ்கின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மிஷ்கினுடைய போர்ஷன் சில நாட்களுக்கு முன்பு முடிந்தது. அதனை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

லியோவில் இணைந்த சஞ்சய் தத்
இந்தச் சூழலில் லியோ படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஷூட்டிங்கில் அவர் இணையாமல் இருந்தார். சமீபத்தில் அவர் காஷ்மீர் சென்று லியோ படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டார். அதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது,.

லியோ ப்டத்தில் இணைந்திருக்கும் மற்றொரு பிரபலம்
இந்நிலையில் லியோ படத்தில் மற்றொரு வில்லன் நடிகர் கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி மாநகரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த மதுசூனன் ராவும் லியோ படத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் 24ஆம் தேதி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











