Madhavan IPhone 15: ஐ ஜாலி.. ஐபோன் 15 வாங்கிட்டேன்.. சந்தோஷத்தில் துள்ளிக்குதித்த மாதவன்!

சென்னை: சினிமா பிரபலங்கள் காஸ்ட்லி கார் வாங்கினால் கூட பப்ளிக்காக சொல்ல மாட்டார்கள். ஆனால், நடிகர் மாதவன் ஐபோன் 15 ஸ்மார்ட்போனை வாங்கிய நிலையில், தனது சந்தோஷத்தை சோஷியல் மீடியாவில் பதிவிட ஒரு பெரிய காரணமே இருப்பது குறிப்பிடத்தக்கது.

ராக்கெட்ரி திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக மாதவன் அறிமுகமான நிலையில், அவர் இயக்கிய முதல் படமே இந்தியாவிலேயே சிறந்த படமாக தேசிய விருதை தட்டித் தூக்கியது.

தொடர்ந்து தேசப்பற்று அதிகம் கொண்டுள்ள மாதவன் தற்போது ஐபோன் 15 ஸ்மார்ட்போனை வாங்கி பெருமைப்படுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

Actor Madhvan buys new IPhone 15 for this reason only

ராக்கெட்ரி: ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து தேச துரோக வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதையும் அந்த வழக்கில் தன்னை நிரபராதி என நிரூபிக்க அவர் போராடியதையும் உணர்வுபூர்வமாக காட்சிப்படுத்தி இருந்தார் மாதவன்.

ராக்கெட்ரி நம்பி விளைவு படத்தை இயக்கி நடித்து இருந்த மாதவனுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள் நிகழ்வில் சிறந்த திரைப்படமாக ராக்கெட்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் மாதவன் ஜிடி நாயுடு திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், பாலிவுட்டில் அஜய் தேவகன் மற்றும் ஜோதிகா நடிக்கும் படத்திலும் மாதவன் நடித்து வருகிறார்.

ஐபோன் 15 வாங்கிய மாதவன்: இந்நிலையில் நடிகர் மாதவன் ஐபோன் 15 ஸ்மார்ட்போனை வாங்கி விட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ளார். மேட் இன் இந்தியா என்பதால் பெருமையுடன் ஐபோன் 15 போனை தான் வாங்கி இருப்பதாக மாதவன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Actor Madhvan buys new IPhone 15 for this reason only

சமீபத்தில் வெளியான ஐபோன் 15 ஸ்மார்ட்போன் இந்தியாவில் உருவாக்கப்பட்ட போன் என்பது குறிப்பிடத்தக்கது. பல சினிமா பிரபலங்களும், பொதுமக்களும் ஐபோன் 15 போனை வாங்கி வருகின்றனர்.

வெளிநாடுகளை விட ஐபோன் 15 இந்தியாவில் அதிக விலையில் இருப்பதாக ட்ரோல்களும் மீம்களும் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஐபோன் 15ன் விலை 79,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தனது தேசப்பற்றை காட்ட நடிகர் மாதவன் காஸ்ட்லி ஐபோன் எல்லாம் வாங்குறாரே என நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து கலாய்த்தும் வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X