Ajith - லேட்டாக வந்த மேக்கப் மேன்.. முதுகில் அடித்து அஜித் செய்த காரியம்

சென்னை: Ajith (அஜித்) தனது மேக்கப் மேன் ஷூட்டிங்கிற்கு லேட்டாக வந்ததை அடுத்து அஜித் செய்த காரியம் குறித்து நடிகர் மதுரை மோகன் தெரிவித்திருக்கிறார்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த துணிவு படம் வெற்றி பெற்றது. இதனையடுத்து தனது 62ஆவது படத்தில் நடிக்கிறார் அஜித்குமார். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மகிழ் திருமேனி இயக்கும் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். வாரிசுடன் களமிறங்கி துணிவு வெற்றி பெற்றதால் தனது 62ஆவது படத்தையும் ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்பதில் அஜித் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது.

கதைக்கு லேட் ஆனது: இதனை அஜித்குமார் மகிழ் திருமேனியிடமும் கூறியதாகவும் அதனையொட்டிதான் கதையை உருவாக்குவதற்கு அவர் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டதாக தெரிகிறது. அதேசமயம் படத்தின் பெயரான விடாமுயற்சிக்கு ரசிகர்களில் ஒரு தரப்பினர் விமர்சனத்தை முன்வைக்க, மகிழ் திருமேனியின் கதையும், மேக்கிங்கும் அட்டகாசமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் அஜித் ரசிகர்கள் இருக்கின்றனர்.

 Actor Madurai Mohan shares a incident about ajithkumar shooting spot

வேர்ல்ட் டூர்: அஜித் தனது முதல்கட்ட வேர்ல்ட் டூரை சமீபத்தில் தொடங்கினார். நேபாளம், பூடான் உள்ளிட்ட பகுதிகளில் ரைட் செய்த அவர் கடந்த 8ஆம் தேதியோடு பயணத்தை முடித்து சென்னை திரும்பியிருக்கிறார். அஜித் இதுவரை எங்கெங்கு பைக்கில் சென்றிருக்கிறார் என்ற புகைப்படத்தை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். அதேபோல் அஜித் தனது அடுத்தக்கட்ட சுற்றுப்பயணத்தை நவம்பர் மாதம் தொடங்குவார் எனவும் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார்.

விடாமுயற்சியில் பிரச்னை: இந்தச் சூழலில் மே 22ஆம் தேதி விடாமுயற்சி ஷூட்டிங் சென்னையில் பூஜையுடன் தொடங்கவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இடையில் லைகாவில் நடந்த அமலாக்கத் துறை சோதனை காரணமாக அஜித் லைகாவுக்கு பதில் வேறு ஒரு நிறுவனத்துக்கு விடாமுயற்சி படத்தில் நடிக்கலாம் என்ற யோசனையில் இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதில் உண்மையில்லை லைகா நிறுவனத்திடம் அவர் 40 கோடி ரூபாய்வரை அட்வான்ஸ் வாங்கிவிட்டார் எனவே லைகாவுக்குத்தான் விடாமுயற்சியில் நடிப்பார் என திரைத்துறை வட்டாரம் கூறுகிறது.

மதுரை மோகன் பேட்டி: இந்நிலையில் அஜித் நடித்த சிட்டிசன் படத்தில் பணியாற்றிய நடிகர் மதுரை மோகன் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அவர் அளித்த பேட்டியில், "அஜித் நடித்த ஒரு படத்தின் ஷூட்டிங் பச்சையப்பாஸ் கல்லூரிக்கு எதிரில் இருந்த குஷால்தாஸ் கார்டனில் நடந்தது. அப்போது ஒரு நாள் அவரது மேக்கப் மேன் தாமதமாக வந்துவிட்டார். வேர்க்க விறுவிறுக்க ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தார்.

அஜித் செய்த காரியம்: அதனை பார்த்த அஜித் ஏன் லேட் என கேட்டார். அதற்கு அந்த மேக்கப் மேன் இரண்டு பேருந்துகள் மாறி வரவேண்டிய சூழல் அதான் லேட் என்று கூறினார். சரி உனக்கு பைக் ஓட்ட தெரியுமா என கேட்டார். அவரும் ஓட்ட தெரியும் என்றார். சரி வேலையை கவனி என்று சென்றுவிட்டார். ஷூட்டிங் முடிந்த அன்று மாலை தனது மேனேஜரை கூப்பிட்ட அஜித் சாவியை கொடுங்க என கூறி புது ஹீரோ ஹோண்டா பைக்கை அந்த மேக்கப் மேனுக்கு கொடுத்துவிட்டார். உடனே அந்த மேக்கப் மேன் அஜித் காலில் விழுந்தார். பதறிய அஜித் அவரது முதுகில் ஒரு அடி அடித்து இதெல்லாம் செய்யாதே. இனி ஷூட்டிங்குக்கு லேட்டா வராதே என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்" என்று அந்தப் பேட்டியில் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X