'நான் அப்பவே சொன்னேன்ல, வித்தியாசமா இருக்கும்னு..' பிரபல பிக்பாஸ் நடிகரின் மனைவி ஜாலி கேலி பதிவு!

By

சென்னை: பிக்பாஸ் நடிகரின் மனைவி இஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Recommended Video

Celebrity Quarantine pets | Dhruv | Priya Atlee |Yashika

நடிகர் மகத் ராகவேந்திரா- முன்னாள் மிஸ் இந்தியா, பிராச்சி மிஸ்ரா காதல் திருமணம் சென்னை அருகே இன்று நடந்தது.

நடிகர் சிம்புவின் வல்லவன், காளை படங்களில் சிறு வேடங்களில் நடித்த மகத், அஜித்தின் 'மங்காத்தா' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார்.

யாஷிகா ஆனந்த்

யாஷிகா ஆனந்த்

பிறகு பிரியாணி, வடகறி, சென்னை 28 இரண்டாம் பாகம், அன்பானவன் அடங்காதன் அசராதவன், வந்தா ராஜாவாத்தான் வருவேன் உட்பட சில படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அதில் பங்கேற்ற நடிகை யாஷிகா ஆனந்துடன் காதல் வரை சென்றார். பின்னர் அது முடிவுக்கு வந்தது.

பிராச்சி மிஸ்ரா

பிராச்சி மிஸ்ரா

இந்நிலையில் 2012 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்ற பிராச்சி மிஸ்ராவை மகத், காதலித்து வந்தார். துபாயில் நடந்த விழா ஒன்றில் சந்தித்துக் கொண்ட இவர்கள், முதலில் நண்பர்களானார்கள். பிறகு காதலர்கள் ஆனார்கள். இவர்கள் காதல் சில வருடங்களாத் தொடர்ந்தது. காதலுக்கு இருவர் வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, கடந்த வருடம் ஏப்ரல் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

எல்லாம் சிறப்பாக

எல்லாம் சிறப்பாக

இதில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், தான் காதலில் விழுந்த கதையை டச்சிகாகப் பதிவிட்டிருந்தார் நடிகர் மகத். அதில், இந்தக் காதல் எப்படி தொடங்கியது என்று தெரியாது. என் வாழ்க்கையில் நீ வந்தபின் எல்லாம் சிறப்பாக மாறி இருக்கிறது' என்று கூறியிருந்தார்.

நடிகர் சிம்பு

இதையடுத்து இவர்கள் திருமணம் மாமல்லபுரம் அருகே உள்ள ரிசார்ட் ஒன்றில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது. நெருக்கமான நண்பர்கள் மற்றும் மணமக்களின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். மகத்தின் நெருங்கிய நண்பர் நடிகர் சிம்புவும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்நிலையில், இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்து, கடந்த 18 ஆம் தேதி ஒரு வருடம் முழுமை அடைந்துள்ளது.

ஒய்ஃப் லைஃப்

இதையடுத்து தனது காதல் மனைவி பிராச்சிக்கு, லவ்விங் த குவாரைன்டைன்ட் ஒய்ஃப்
லைஃப் என்று அச்சிடப்பட்ட டிசர்ட்டை நடிகர் மகத் பரிசளித்திருந்தார். இதை பிராச்சி
இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இதற்கு ஏராளமானவர்கள் கமென்ட் அடித்திருந்தனர்.
இந்நிலையில், பிராச்சி தனது இன்ஸ்டாகிராமில் ஜாலியாகப் பதிவிட்டுள்ளார்.

வீட்டுக்காவல்

வீட்டுக்காவல்

அதில், நிச்சயதார்த்தம் நடந்து ஒரு வருஷமாச்சு. நான்தான் சொன்னேனே, நமது ஒருவருட வாழ்க்கை வித்தியாசமாக இருக்கும் என்று. இப்போது நாம், வீட்டுக்காவலில் இருக்கிறோம். லவ் யூ பேபி என்று கூறியுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் அவர்களுக்கு நிச்சயதார்த்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X