நான் அப்பாவாக போகிறேன்.. கர்ப்பிணி மனைவிக்கு முத்தமிட்டு அசத்தலாய் அறிவித்த பிக்பாஸ் பிரபலம்!
சென்னை: கர்ப்பிணி மனைவியுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து தான் அப்பாவாக போவதை அசத்தலாக அறிவித்துள்ளார் பிக்பாஸ் பிரபலம்.
'மங்காத்தா', 'ஜில்லா', 'வந்தா ராஜாவா தான் வருவேன்' போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர் நடிகர் மகத்.
சிம்புவின் நெருங்கிய நண்பரான இவர், விஜய் டிவி-யில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

சர்ச்சைகளில் சிக்கிய மகத்
இதில் சக போட்டியாளரான யாஷிகாவுடன் நெருக்கமாக இருப்பது, மூத்த போட்டியாளர்களிடம் மரியாதை இன்றி நடந்து கொள்வது என பல சர்ச்சைகளில் சிக்கினார். பிக்பாஸ் வீட்டில் யாஷிகாவை காதலித்ததார் மகத்.

மகத்துக்கு ரெட் கார்டு
இதனால் வெளியே இருந்த அவரது காதலியான மாடல் அழகி பிராச்சி மிஸ்ரா மகத்துடனான காதலை முறித்துக் கொள்வதாக கூறினார். பின்னர் மும்தாஜிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டதால் பிக்பாஸ் வீட்டில் இருந்து ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார் மகத்.

கடந்த ஆண்டு திருமணம்
வெளியே வந்த பிறகு தனது காதலியை சமாதானப்படுத்திய மகத், அவருடன் மீண்டும் காதலை தொடர்ந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ம் தேதி இவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர்.

ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம்
இதில் மகத்தின் நண்பர் சிம்பு, கலந்துக் கொண்டார். இந்நிலையில் நேற்று தங்களின் முதல் திருமண நாளை கொண்டாடினர் மகத்தும் அவரது மனைவி பிராச்சியும். தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட மகத், "நாங்கள் இருவரும் அழகிய குழந்தையால் ஆசீர்வதிக்கப் பட்டுள்ளோம்.

மனைவிக்கு முத்தம்
இந்த வருடம் மே மாதத்தில் எங்கள் குழந்தை வருகிறது. இந்த சிறந்த பரிசுக்கு நன்றி பிராச்சி மிஸ்ரா. லவ் யூ" என்று தெரிவித்துள்ளார். மேலும் தனது கர்ப்பிணி மனைவியின் வயிற்றில் முத்தமிடும் போட்டோவையும் ஷேர் செய்துள்ளார் மகத்.

ரசிகர்கள் வாழ்த்து
மகத்தின் இந்த நெகிழ்ச்சி பதிவை பிராச்சியும் ரீபோஸ்ட் செய்துள்ளார். இதனிடையே தான் அப்பாவாக போவதாக அறிவித்துள்ள மகத்துக்கும் அவரது மனைவி பிராச்சிக்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











