சிம்புவின் நெருங்கிய நண்பர்.. பிக்பாஸ் மகத்துக்கு கல்யாணமாமே.. எப்போ? யார் கூடனு பாருங்க!

Recommended Video

Actor Mahat Prachi Engagement: நிச்சயமான மகத் பிரச்சி- வீடியோ

சென்னை: நடிகர் மகத்துக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

நடிகர் மகத் நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர். அவர் நடித்த வல்லவன், காளை உள்ளிட்ட படங்களில் சிறு வேடங்களில் நடித்தார்.

தொடர்ந்து அஜித்தின் மங்காத்தா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார் மகத். மேலும் பிரியாணி, வடகறி ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார் மகத்.

சர்ச்சைகள்

சர்ச்சைகள்

இவர் பிக்பாஸ் சீசன் 2வில் பங்கேற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல சர்ச்சைகளில் சிக்கினார் மகத்.

மன வேதனைக்கு

மன வேதனைக்கு

தனக்கு ஏற்கனவே வெளியே காதலி இருந்த போதும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற யாஷிகா ஆனந்தின் காதலை ஏற்றுக்கொண்டார். இதனால் அவரது காதலியான பிராச்சி மிஸ்ரா பெரும் மன வேதனைக்கு ஆளானார்.

ரெட் கார்டு

ரெட் கார்டு

தொடர்ந்து சக போட்டியாளரான நடிகை மும்தாஜிடம் தரக்குறைவாக நடந்துகொண்டதற்காக ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்டார் மகத்.

காதலியுடன்

காதலியுடன்

இந்நிலையில் நடிகர் மகத்திற்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் மீண்டும் தனது காதலியுடன் இணைந்தார் மகத்.

எப்போது திருமணம்

எப்போது திருமணம்

மகத்திற்கு பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த வருடம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.திருமணம் குறித்த தகவல் எதுவும் வெளிவராத நிலையில் தற்போது எப்போது திருமணம் என்று தெரியவந்துள்ளது.

நெருங்கிய நண்பர்கள்

நெருங்கிய நண்பர்கள்

அதாவது மஹத்திற்கு பிராச்சியுடன் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் திருமணம் நடைபெற உள்ளது .2 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ரசிகர்கள் வாழ்த்து

ரசிகர்கள் வாழ்த்து

மகத்தின் திருமண தகவலை அறிந்த ரசிகர்கள், ஒரு வழியாக காதலித்த பெண்ணையே கரம் பிடிக்கிறீர்களே என வாழ்த்து கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X