சிம்புவின் நண்பர்... நடிகர் மகத் ராகவேந்திரா, முன்னாள் மிஸ் இந்தியா காதல் திருமணம் இன்று நடந்தது
சென்னை: நடிகர் மகத் ராகவேந்திரா- முன்னாள் மிஸ் இந்தியா, பிராச்சி மிஸ்ரா காதல் திருமணம் சென்னை அருகே இன்று நடந்தது.
நடிகர் சிம்புவின் வல்லவன், காளை படங்களில் சிறு வேடங்களில் நடித்த மகத், அஜித்தின் 'மங்காத்தா' படத்த்இல் முக்கிய கேரக்டரில் நடித்தார்.
பிறகு பிரியாணி, வடகறி, சென்னை 28 இரண்டாம் பாகம், அன்பானவன் அடங்காதன் அசராதவன், வந்தா ராஜாவாத்தான் வருவேன் உட்பட சில படங்களில் நடித்தார்.

பிராச்சி மிஸ்ரா
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அதில் பங்கேற்ற யாஷிகா ஆனந்த்துடன் காதல் வரை சென்றார். இந்நிலையில் 2012 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்ற பிராச்சி மிஸ்ராவை நடிகர் மகத் காதலித்து வந்தார். துபாயில் நடந்த விழா ஒன்றில் சந்தித்துக் கொண்ட இவர்கள், நண்பர்களாகி பின் காதலர்கள் ஆனார்கள்.

காதலில் விழுந்த கதை
இவர்கள் காதலுக்கு இருவர் வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, கடந்த வருடம் ஏப்ரல் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர். திருமண தேதி அப்போது அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு காதலில் விழுந்த கதையை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் மகத்.

நமக்கான எதிர்காலம்
அதில், இந்தக் காதல் எப்படி தொடங்கியது என்று தெரியாது. என் வாழ்க்கையில் நீ வந்தபின் எல்லாம் சிறப்பாக மாறி இருக்கிறது. உன்னுடன் இருக்கும் ஒவ்வொரு நாளையும் ரசிக்கிறேன். முன்னால் இருக்கும் நமக்கான எதிர்காலத்தைக் காண ஆவலாக இருக்கிறேன். நன்றி என்று தெரிவித்திருந்தார்.

மாமல்லபுரம்
இதையடுத்து இவர்கள் திருமணம் மாமல்லபுரம் அருகே உள்ள பீச் ரிசார்ட் ஒன்றில் இன்று காலை நடந்தது. கடந்த இரண்டு நாட்களாகத் திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று திருமணம் நடந்தது. இதில் நெருக்கமான நண்பர்கள் மற்றும் மணமக்களின் குடும்பத்தினர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.


Click it and Unblock the Notifications











