குட்டி பவானியின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்.. தெறி இணையதளம்!
சென்னை : சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் மகேந்திரன் குட்டி பவானி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார்.
Recommended Video
குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்திருந்த இவருக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.
அடுத்தடுத்து திரைப்படங்களில் ஒப்பந்தமாகி வரும் இவர் இப்பொழுது கலக்கலான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு தெறிக்க விட்டுள்ளார்.

மாபெரும் வெற்றி
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படம் கடந்த பொங்கலன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு மாபெரும் வெற்றி பெற்று இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த அளவு இருக்கைகளே அனுமதிக்கப்பட்டு இருந்தாலும் அதிக வசூலை ஈட்டி கெத்து காட்டி வருகிறது.

குழந்தை நட்சத்திரமாக
ஹீரோவுக்கு இணையாக வில்லன் கதாப்பாத்திரம் அமைக்கப்பட்டிருக்க விஜய்சேதுபதியின் பவானி கதாபாத்திரத்தில் சிறுவயது வேடத்தில் நடித்து கலக்கி இருந்தவர் நடிகர் மாஸ்டர் மகேந்திரன். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நாட்டாமை, கோபாலா கோபாலா, முகவரி என பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான குழந்தை நட்சத்திரமாக இருந்துள்ளார்.

திருப்புமுனையாக
விழா, திட்டக்குடி உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும் நடித்து வந்த இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காமல் பல வருடங்களாக போராடி வந்த மாஸ்டர் மகேந்திரனுக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்து இருக்க இப்பொழுது அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருவதாக சொல்லப்படுகிறது.

கோட் சூட் கையில் கிட்டார்
மிகச் சிறந்த நடிகர் ஆனால் இன்னும் சினிமாவில் ஜொலிக்க முடியவில்லை என பலரும் யோசித்துக் கொண்டிருக்க இந்த தரமான விதையை சரியான நேரம் பார்த்து விதைத்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். எட்டுத்திக்கிலுமிருந்து மகேந்திரனுக்கு பல்வேறு பாராட்டுகள் வந்து கொண்டிருக்க இப்பொழுது போட்டோ ஷூட்டில் கலக்கி வருகிறார். மஞ்சள் நிற டிசர்ட்டில் ஜிகு ஜிகுன்னு என ஜொலிக்கும் கோட் சூட் கையில் கிட்டார் உடன் செம ஸ்டைலாக நின்று போஸ் கொடுத்துள்ளார் மகேந்திரன். இந்த லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











