பெட்டில் மகளை கட்டிப்பிடித்துக் கொண்டு தூங்கும் சூப்பர் ஸ்டார் நடிகர்.. நெகிழ வைக்கும் போட்டோ!
சென்னை: நடிகர் மகேஷ் பாபு தனது மகளை பெட்டில் கட்டியணைத்துக் கொண்டு படுத்திருக்கும் போட்டோ இணையத்தை தெறிக்க விட்டு வருகிறது.
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வருபவர் நடிகர் மகேஷ் பாபு. கடைசியாக இவரது நடிப்பில் சரிலேறு நீக்கெவரு என்ற படம் வெளியானது.
தற்போது சர்காரு வாரி பாட்டா மற்றும் மேஜர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் உள்ளார் மகேஷ் பாபு.

குழந்தைகளுடன்..
தற்போது கொரோனா இரண்டாவது அலை காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால் நடிகர் மகேஷ் பாபு தனது குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் நேரத்தை செலவழித்து வருகிறார்.

கூலான அப்பா
மகேஷ் பாபுவுக்கு நம்ரதா என்ற மனைவியும் கவுதம் என்ற மகனும் சித்தாரா என்ற மகளும் உள்ளனர். கூலான செலிபிரிட்டி அப்பாவாக வலம் வரும் மகேஷ் பாபு, அவ்வப்போது தனது குழந்தைகளுடன் ஓய்வு நேரத்தை கழித்து வருகிறார்.

மகளை அரவணைத்து
இந்நிலையில் சனிக்கிழமையன்று, நம்ரதா ஷிரோட்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகேஷ் பாபுவின் போட்டோ ஒன்றை பகிர்ந்தார். அந்தப் படத்தில் மகேஷ் பாபு தனது மகளை அரவணைத்து அணைத்து படுத்துள்ளார்.

அனைத்து வேடிக்கைக்கும்
இதில் மகேஷ் பாபு தனது மகளுடன் வேடிக்கையான நேரத்தை செலவிடுவதிலிருந்து ஒருபோதும் வெட்கப்படுவதில்லை என்பதையும், அவர்களின் அனைத்து வேடிக்கையான விளையாட்டுகளுக்கும் தயாராக இருப்பதையும் தெரிகிறது.

உணர்ந்து கொண்டார்
இந்த போட்டோவுக்கு கட்ல்ஸ் தேவையற்றது! எப்போது வேண்டுமானாலும் !! ஏதாவது இடம்!! பள்ளிகள் தொடங்கத் தொடங்கியுள்ள நிலையில், இவை அனைத்தும் விரைவில் கிடைக்கும் !! மகேஷ் பாபு அதை உணர்ந்து கொண்டார் என பதிவிட்டுள்ளார்.
Recommended Video

பெரும் வைரல்
ஏற்கனவே ஒரு போட்டோவில் சேரில் அமர்ந்திருக்கும் மகேஷ் பாபு தனது மகளை மடியில் படுக்க வைத்திருந்தார். நம்ரதா பகிர்ந்த அந்த போட்டோ பெரும் வைரலானது. லைக்ஸ்களையும் குவித்தது.

மகனை அணைத்து
இதேபோல் மகேஷ் பாபு தனது மகளை தூக்கி வைத்துக் கொண்டும் மகனை அணைத்துக் கொண்டும் இருந்த போட்டோவும் வைரலானது. இந்த போட்டோவும் லைக்ஸ்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











