இயக்க்குனர் ஷங்கரிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்…. என்ன காரணம் தெரியுமா?
சென்னை : பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் டோலிவுட் பிரபல நடிகர் மகேஷ்பாபு மன்னிப்பு கேட்டுள்ளார்.
சர்க்காரு வாரி பாட்டா திரைப்படம் மே 12ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.
இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த மகேஷ் பாபு பல சுவாரசியத் தகவலை பகிர்ந்து கொண்டார்.

சர்க்காரு வாரி பாட்டா
தெலுங்கில் பரசுராம் இயக்கத்தில் மகேஷ்பாபு, கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள படம் சர்க்காரு வாரி பாட்டா. தமன் இசை அமைத்துள்ள இந்த படம் சங்கராந்தியை யொட்டி கடந்த ஜனவரி 11ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ராஜமவுலியின் ஆர் ஆர் ஆர், பிரபாஸின் ராதே ஷ்யாம் போன்ற படங்கள் வரிசையில் மகேஷ்பாபு படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது வருகிற மே மாதம் 12ஆம் தேதி உலகம் முழுக்க சர்க்கார் வாரி பாட்டா வெளியாக உள்ளது.

மகேஷ்பாபு பேட்டி
சர்க்காரு வாரி பாட்டா திரைப்படம் மே 12ந் தேதி வெளியாக உள்ள நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள மகேஷ் பாபு, படம் குறித்து பல சுவாரசியத் தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்போது, அவர் இயக்குனர் ஷங்கரிடம் மன்னிப்பு கேட்டது குறித்தும் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

மறுத்துவிட்டேன்
ஒருமுறை, நான் என் குடும்பத்துடன் நட்சத்திர ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன், அப்போது இரண்டு பெண்கள் என்னிடம் வந்து ஆட்டோகிராப் கேட்டேன். நான் குடும்பத்துடன் தனிப்பட்ட நேரம் என்று கூறி மறுத்துவிட்டேன். அப்போது ஒரு நண்பர் என்னிடம் வந்து, அந்த பெண்கள் இயக்குனர் ஷங்கரின் மகள்கள் என்று கூறினார்.

மன்னிப்பு கேட்டேன்
அதைக்கேட்டு நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன், உடனே அவர்களை சந்திக்க சென்றேன். அப்போது ஷங்கரை பார்த்து மறுத்ததற்கு மன்னிப்பு கோரினேன்.அப்போது,ஷங்கர் ஹீரோக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை மகள்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியதாக மகேஷ் கூறினார். ஷங்கரின் மகள்கள் இருவருமே மிகவும் சாதாரணமாக இருந்தார்கள், அது எனக்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்றார்.


Click it and Unblock the Notifications











