Mahesh babu: 1000 கோடியில் உருவாகும் SSMB29.. ஜெர்மனி பறந்த மகேஷ்பாபு!

ஐதராபாத்: நடிகர் மகேஷ்பாபுவின் குண்டூர் காரம் படம் பொங்கலையொட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசாகி பட்டையை கிளப்பி வருகிறது. விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் இந்தப் படம் சிறப்பாக அமைந்துள்ளது. ரசிகர்களை ஈர்க்கும் கமர்ஷியல் அம்சங்கள் அனைத்தையும் இந்தப் படம் பெற்றுள்ளதும் இதற்கு காரணம். இந்த ஆண்டின் துவக்கத்திலேயே தன்னுடைய வெற்றிக் கொடியை சிறப்பாக நட்டு தன்னுடைய பயணத்தை துவங்கியுள்ளார் மகேஷ்பாபு.

அடுத்ததாக பிரபல இயக்குநர் ராஜமௌலியுடன் தன்னுடைய SSMB29 படத்திற்காக இணைந்துள்ளார் மகேஷ் பாபு. இந்தப் படத்தின் சூட்டிங் இன்றைய தினம் துவங்கவுள்ளது. ஆக்ஷன் மற்றும் அட்வென்சர் ஜானரில் உருவாகவுள்ள இந்தப் படம் உலகெங்கிலும் வெவ்வேறு இடங்களில் நடப்பதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக முன்னதாக பேட்டியொன்றில் ராஜமௌலி தெரிவித்திருந்தார். இந்தப் படம் மூன்று பாகங்களாக அதிகமான பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதனால் உருவாக்கத்திற்கு முன்னதாகவே இந்தப் படம் அதிகமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

Actor Mahesh babu joins SSMB29 team in Germany and spotted in Hyderabad Airport

நடிகர் மகேஷ்பாபு: நடிகர் மகேஷ்பாபு தெலுங்குப்படவுலகின் சூப்பர் ஹீரோவாக தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறார். இவரது நடிப்பில் பொங்கலையொட்டி குண்டூர் காரம் படம் வெளியானது. விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் இந்தப் படம் மிகப்பெரிய உயரத்தை தொட்டுள்ளது. இந்த 2024ம் ஆண்டை சிறப்பான வெற்றியுடன் துவங்கியுள்ளார் மகேஷ் பாபு. ஆக்ஷன், காமெடி என கமர்ஷியல் அம்சங்களுடன் வெளியாகியுள்ள இந்தப் படம் தொடர்ந்து வசூல்மழை பொழியும் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக SSMB28 படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக ராஜமௌலியுடன் அடுத்தப்படத்தில் கமிட்டாகியுள்ளார் மகேஷ் பாபு.

மகேஷ்பாபு -ராஜமௌலி கூட்டணி: ஆர்ஆர்ஆர் படத்திற்கு பிறகு மகேஷ்பாபுவுடன் இயக்குநர் ராஜமௌலி இணைந்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் இன்று முதல் துவங்கியுள்ளது. ஆக்ஷன் மற்றும் அட்வென்சர் ஜானரில் இந்தப் படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் பல இடங்களில் நடப்பதாக இந்தப் படத்தை கதை அமைக்கப்பட்டுள்ளதாக முன்னதாக பேட்டியொன்றில் ராஜமௌலி தெரிவித்திருந்தார். மேலும் படம் 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 3 பாகங்களாக உருவாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தெலுங்கில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் மகேஷ் பாபு மற்றும் ராஜமௌலிக்கு அதிகமான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.

ஜெர்மனி பறந்த மகேஷ்பாபு: இவர்கள் இருவரும் இணைவது SSMB29 படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தினம் ஜெர்மனியில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ள நிலையில், இதற்காக தற்போது மகேஷ்பாபு உள்ளிட்ட படக்குழுவினர் ஜெர்மனி புறப்பட்டு சென்றுள்ளனர். இந்தப் படத்தில் ஹாலிவுட் நடிகர்களும் நடிக்கவுள்ளதாக முன்னதாக விஜயேந்திர பிரசாத் உறுதிப்படுத்தியிருந்தார். ஆப்ரிக்காவில் நடக்கும் சாகச பயணமாக இந்தப் படம் இருக்கும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார். இந்தப் படம் ஆர்ஆர்ஆர் படத்தைக் காட்டிலும் அதிகமான சிறப்புகளுடன் உருவாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

ஐதராபாத் ஏர்போர்ட்டில் மகேஷ்பாபு: SSMB29 படத்தின் சூட்டிங் ஜெர்மனியில் துவங்கவுள்ள நிலையில் இந்தப் படத்திற்காக மகேஷ்பாபு பயிற்சியில் ஈடுபட உள்ளதாகவும் விஜயேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதையொட்டி ஐதரபாத் விமானநிலையத்தில் மகேஷ்பாபுவை இன்றைய தினம் பார்க்க முடிந்தது. மேலும் மகேஷ்பாபு 3 நாட்கள் மட்டுமே ஜெர்மனியில் இருப்பார் என்றும் இந்த பயணத்தில் படத்தின் பயன்படுத்தப்படவுள்ள தொழில்நுட்பங்கள் குறித்து மகேஷ்பாபு அறிந்துக் கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜமௌலியின் அறிவுறுத்தலின்பேரில் மகேஷ்பாபு, இந்த தொழில்நுட்பங்களை அறியவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X