நிறைவேறாமல் போன மகேஷ்பாபுவின் கனவு.. என்னன்னு தெரியுமா?

சென்னை : பொன்னியின் செல்வன் பாகம் 1 வரும் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இந்தப் படம் பான் இந்தியா படமாக இந்திய அளவில் 5 மொழிகளில் ரிலீசாக உள்ளது. படத்தின் டீசர், ட்ரெயிலர், பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.

இந்தப் படம் பலரது கனவு ப்ராஜெக்ட்டாக இருந்த நிலையில், முன்னதாக மணிரத்னமே இந்தப் படத்தை இரண்டு முறை முயற்சித்தது குறிப்பிடத்தக்கது.

பொன்னியின் செல்வன் படம்

பொன்னியின் செல்வன் படம்

நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயசித்ரா, ஜெயராம், பார்த்திபன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வரும் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது பொன்னியின் செல்வன் பாகம் 1. இந்தப் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது.

 சிறப்பு விருந்தினர்கள்

சிறப்பு விருந்தினர்கள்

இந்நிலையில் படத்தின் டீசர், பாடல்கள் மற்றும் ட்ரெயிலர் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பையும் படத்திற்கான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டில் சிறப்பு விருந்தினர்களாக கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் பங்கேற்று சிறப்பித்தனர்.

பிரம்மாண்ட இசை வெளியீடு

பிரம்மாண்ட இசை வெளியீடு

இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள 6 பாடல்களையும் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் படக்குழுவினர் வெளியிட்டனர். மிகவும் பிரம்மாண்டமாக படத்தின் இசை வெளியீடு நடைபெற்றது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட படக்குழுவினரும் கலந்துக் கொண்டனர்.

கனவு பிராஜெக்ட்

கனவு பிராஜெக்ட்

இந்தப் படம் எம்ஜிஆர், கமல்ஹாசன் உள்ளிட்டவர்களின் கனவு ப்ராஜெட்டாக அமைந்தது. ஆனால் அவர்களால் இந்த முயற்சியை, கனவை செயல்படுத்த முடியாத நிலையில், முன்னதாக மணிரத்னமே இருமுறை பொன்னியின் செல்வன் நாவலை திரைக்காவியமாக்க முயன்றுள்ளார். ஆனால் 3வது முயற்சியிலேயே இந்தப் படம் அவருக்கு சாத்தியமாகியுள்ளது.

முந்தைய முயற்சி

முந்தைய முயற்சி

முன்னதாக விஜய், மகேஷ்பாபு, விக்ரம் உள்ளிட்டவர்களை கொண்டு இந்தப் படத்தை இயக்க மணிரத்னம் முயற்சி மேற்கொண்டார். அந்தப் படத்தில் வந்தியத்தேவனாக விஜய் நடிப்பதாக இருந்தது. ஆனால அந்த முயற்சி பலிதமாகவில்லை. இந்நிலையில் கடந்த 2011ல் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி குறித்த மகேஷ்பாபுவின் ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

 தகர்ந்த மகேஷ்பாபுவின் கனவு

தகர்ந்த மகேஷ்பாபுவின் கனவு


அவர் தனது ட்விட்டர் பதிவில் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற தனது கனவு நனவாகியுள்ளதாகவும் விரைவில் அவரது இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளதாகவும் தன்னுடைய வாழ்க்கையின் அருமையான தருணமாக இதை உணர்வதாகவும் தெரிவித்துள்ளார்.

உறுதி செய்த ஜெயமோகன்

உறுதி செய்த ஜெயமோகன்

இதனிடையே இந்த ப்ராஜெக்ட் குறித்து தற்போது பேசியுள்ள எழுத்தாளர் ஜெயமோகன், அந்த காலத்தில் விஜய் வந்தியத்தேவனாகவும் மகேஷ் பாபு அருள்மொழி வர்மனாகவும் ஆதித்த கரிகாலனாக விக்ரமும் இந்தப் படத்தில் இணைந்ததாகவும் தொடர்ந்து இந்தப் படத்தில் விஜய் நடிக்க முடியாமல் போன நிலையில், மகேஷ்பாபுவும் படத்திலிருந்து விலகியதாகவும் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X