சஸ்பென்சை கொன்னுட்டாங்களே... லுங்கி டான்ஸ் லீக் ஆனதால் ஹீரோ டென்ஷன்

By

ஐதராபாத்: தெலுங்கு படத்துக்காக மகேஷ்பாபு நடனம் ஆடிய லுங்கி டான்ஸ் ஸ்டில் லீக் ஆனதால் படக்குழு ஏமாற்றம் அடைந்துள்ளது.

தெலுங்கு திரையுலகின் டாப் ஹீரோக்களில் ஒருவர் மகேஷ்பாபு. டோலிவுட்டின் 'பிரின்ஸ்' என அழைக்கப்படும் மகேஷ்பாபு, தற்போது நடித்துள்ள படம், சரிலேரு நீக்கெவ்வரு.

Actor Mahesh Babu’s lungi dance scene leaked

இதில் ராணுவ வீரராக மகேஷ் பாபு நடித்துள்ளார். முன்னாள் ஹீரோயின் விஜயசாந்தி, முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

அனில் ரவிபுடி இயக்கியுள்ள இதில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், ராஜேந்திரபிரசாத், ரோகிணி உட்பட பலர் நடித்துள்ளனர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜனவரி மாதம் 11 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

ஐதராபாத்தில் உள்ள சுதர்சன் 35 எம்எம் என்ற தியேட்டரில், மகேஷ்பாபு ரசிகர்கள் 81 அடி உயர கட்-அவுட்டை வைத்துள்ளனர்.

Actor Mahesh Babu’s lungi dance scene leaked

படத்தை 3 நிறுவனங்கள் சேர்ந்து தயாரிக்கின்றன. அதில் ஒன்று, ஹீரோ மகேஷ்பாபுவின் நிறுவனம். இதில், மகேஷ்பாபு ரூ.42 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தில் லுங்கி கட்டியபடி டான்ஸ் ஆடியிருக்கிறார் மகேஷ்பாபு. இந்த டான்ஸை யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக வைத்திருந்தது படக்குழு. ரிலீஸுக்கு சில நாட்களுக்கு முன் இந்த போஸ்டரை வெளியிடலாம் என்றும் முடிவு செய்திருந்தனர்.

ஆனால், அதற்குள் அந்த ஸ்டில் லீக் ஆகி, வைரலாகிவிட்டது. அந்த சஸ்பென்ஸ் போய்விட்டதால், ஹீரோவும் படக்குழுவும் டென்ஷன் ஆகியுள்ளனர்.

படப்பிடிப்பில் இருந்த யாரோ, செல்போனில் அதை படம் பிடித்துள்ளனர். அந்த ஸ்டில்லில் கிளாரிட்டி இல்லை என்றாலும் எல்லோரும் ஷேர் செய்து, சஸ்பென்சை கொன்றுவிட்டார்கள் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X