Mammootty: தலைவர் 171 படத்தில் நடிக்கவில்லை.. எப்போது கூப்பிட்டாலும் நடிக்கத் தயார்.. மம்முட்டி பளீச்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் லால் சலாம் படம் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது தலைவர் 170 படத்தில் ஞானவேல் இயக்கத்தில் நடித்து வருகிறார் ரஜினி.

அடுத்ததாக லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ரஜினிகாந்த் தலைவர் 170 படத்தில் இணையவுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டில் துவங்கவுள்ளது.

Actor Mammootty denies the rumours that he was approached for Thalaivar 171 with Rajinikanth

நடிகர் ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தின் தீ தற்போதே ரசிகர்களிடையே பற்றியுள்ளது. படத்தின் அப்டேட்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றியை அவருக்கு பெற்றுத் தந்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருந்த இந்தப் படத்தின் வசூல் 600 கோடிகளை தாண்டிய நிலையில் படத்தின் வெற்றியை ரஜினி, இயக்குநர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளருடன் தயாரிப்பு தரப்பு கொண்டாடி மகிழ்ந்தது. அவர்களுக்கு விலையுயர்ந்த கார்களை பரிசாக கொடுத்தது.

ஜெயிலர் படம்: தனியாகவும் இந்தப் படத்தின் சக்சஸ் மீட் நடத்தப்பட்டது. இந்நிலையில் அடுத்ததாக தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினியின் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் பொங்கல் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை சமீபத்தில் ரஜினிகாந்தும் தன்னுடைய ட்விட்டர் மூலம் உறுதிப்படுத்தியிருந்தார். இதையடுத்து தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் கமிட்டாகியுள்ள ரஜினிகாந்த், அந்தப் படத்தின் சூட்டிங்கில் விறுவிறுப்பாக பங்கேற்றுள்ளார்.

தலைவர் 171 படம்: இந்தப் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் கமிட்டாகியுள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் இணையதளத்தில் அடுத்தடுத்து ட்ரெண்டானது. இந்நிலையில் இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை தற்போது லோகேஷ் கனகராஜ் துவங்கியுள்ளதாகவும் இதற்காக அவருக்கு பெசண்ட் நகரில் தனியாக வீட்டை தயாரிப்புத் தரப்பு கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினி -மம்முட்டி கூட்டணி?: இந்தப் படமும் மல்ட்டி ஸ்டாரர் படமாக அமையவுள்ளதாகவும் படத்தில் பிரபல மலையாள நடிகர் மம்முட்டி இணைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ரஜினிகாந்த் -மம்முட்டி கூட்டணி கடந்த 1991ம் ஆண்டில் வெளியான தளபதி படத்தில் முன்னதாக இணைந்திருந்த நிலையில் மீண்டும் இவர்கள் தலைவர் 171 படத்தில் இணையவுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது.

Actor Mammootty denies the rumours that he was approached for Thalaivar 171 with Rajinikanth

மம்முட்டி மறுப்பு: இந்நிலையில் மம்முட்டி தான் நடித்துள்ள காதல் தி கோர் படத்தின் நிகழ்ச்சியில் தலைவர் 171 படம் குறித்து பேசியுள்ளார். இதுவரை யாரும் தன்னை இந்தப் படத்தில் நடிப்பதற்காக அணுகவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் அந்தப் படத்தில் நடிப்பதற்காக தன்னை எந்த நேரத்திலும் படக்குழு அணுகலாம் என்றும் அவர் கூறியுள்ளார். இதன்மூலம் மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் தன்னுடைய ஆர்வத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X